சமூக இடைவெளியைப் பேணி பட்டிருப்பில் அமைந்துள்ள தற்காலிக சந்தை சிறப்பாக செயற்பட்டு வருகின்றது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் கீழுள்ள களுவாஞ்சிகுடி பொதுச் சந்தை கொரோனா பீதியின் காரணமாக தற்போது தற்காலிகமாக பட்டிருப்பில் அமைந்துள்ள தனியார் காணி ஒன்றில் இயங்கிவருகின்றது. இச் சந்தைக்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன், மற்றும் பிரதேச சபை உறுப்பினர் இழங்கோ, மற்றும் பிரதேச சபை உத்தியோகஸ்த்தர்களும், களூவாஞ்சிகுடி பொலிஸாருடன் இணைந்து சந்தையை பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது சமூக இடைவெளியை பேனுகின்றார்களா? என்பதை கண்காணித்தனர். பொதுமக்களிடமும், வர்த்தகர்களிடமும் சமூக இடைவெளியை பேனுவதற்குரிய வழிகளை கையாள வேண்டுமென்றும் இதன்போது அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த புதிய தற்காலிக சந்தை மிகவும் சிறப்பான முறையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. சமூக இடைவெளியைப் பேணி மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்து வருகின்றனர் என இக்குழு இதன்போது தெரிவித்தது.
0 Comments:
Post a Comment