மட்டக்களப்பு நகரில் கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை.
மட்டக்களப்பு மாநகரசபை, மட்டக்களப்பு பொலிசார், என பலரும் ஒன்றிணைந்து இச்செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது மட்டக்களப்பு மத்திய பேரூந்து நிலையம், காந்திபூங்கா, வர்த்தக நிலையங்கள், உள்ளிட்ட பிரதான இடங்கள் அனைத்தும் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது பொலிசாரின் நீர் வீச்சு வாகனம், மற்றும் மாநகர சகையினரின் தொற்று நீக்கும் உபரணங்கள் வாயிலான இச்செயற்பாடு இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன், மாநகர சபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.குமாரசிறி, மற்றும் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment