6 May 2020

புழுக்குனாவிக்குளத்தின் நீர் மட்டம் தற்போது 16 அடி 10 இஞ்சி அதிகாரிகள் குழு நேரடி வியஜயம் செய்து நிலமையினைப் பார்வையிட்டுள்ளனர்.

SHARE
புழுக்குனாவிக்குளத்தின் நீர் மட்டம் தற்போது 16 அடி 10 இஞ்சி அதிகாரிகள் குழு நேரடி வியஜயம் செய்து நிலமையினைப் பார்வையிட்டுள்ளனர்.
புழுக்குனாவிக் குளத்திற்கு அரசாங்க அதிபர் மற்றும் பொறியியலாளர் உள்ளிட்ட குழுவினர் செவ்வாய்கிழமை (05) மாலை நேரடி வியஜயம் செய்து நிலமையினைப் பார்வையிட்டுள்ளனர். தற்போது புழுக்குனாவிக் குளத்தை நம்பி தற்போது சிறுபோக வேளாண்மைச் செய்கையில்  ஈடுபட்டுள்ள விவசாயிகள் குறித்த குளத்தில் நிர்மட்டம் மிகவும் வெகுவாகக் குறைந்துள்ளதனால் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலமையினை நேரில் அவதானித்து, குளத்தின் நீர் நிலமை தொடர்பில் அவதானிப்பதற்காக பொறியியலாளர் சகிதம் குளத்திற்கு நேரடி விஜயம் செய்து நிலமையினை அவதானித்தனர்.

புழுக்குநாவை நீர்ப்பாசனக்குளத்தின் முழு நீர்க் கொள்ளளவு 31 அடி 3 இஞ்சி ஆகும். தற்போது 16 அடி 10 இஞ்சி நீர்க் கொள்ளளவுதான் இருக்கின்றது. தற்போதைய நிலமையில் இக்குளத்தை நம்பி வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நீர்த்தட்டுப்பாடு காரணமாக, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் முயற்சியின் பலனாக வெளி மாவட்டத்திலிருந்து (அம்பாறை மாவட்டத்திலிருந்து) நீரைக் கொண்டு வருவதற்குரிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.  எனவே தற்போது இக்குளத்தின் நீர் நிலமைகள் தொடர்பில் எமது உயர்திகாரிகளும், அரசாங்க அதிபர், மற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் நேரடியாக வந்து பார்வையிட்டு நிலமையினை அவதானித்துள்ளனர். எனவே விவசாயிகளின் நன்மை கருதி எம்மாலான அனைத்து நடவடிக்கைகளையும் செவ்வனே மேற்கொண்டு வருகின்றோம். என
பட்டிருப்பு நீர்ப்பாசனப் பெறியியலாளர்; செல்வநாயகம் சுபாகரன் புழுக்குநாவிக் குளத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார். 

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா, பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் திருமதி.தி.தட்சணகௌரி கிழக்குமாகாண பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் வி.இராஜகோபாலசிங்கம், பிரதேச நீர்ப்பாசனப் பொறியியலாளர் எஸ்.சுகாகரன், பிரதேச உதவியாளர் ரி.மதியழகன் உள்ளிட்ட பலர் இவ்விஜயத்தின்போது கலந்து கொண்டிருந்தனர்.





















SHARE

Author: verified_user

0 Comments: