இந்த நடவடிக்கைக்கமைய மட்டக்களப்பு மாவட்ட த்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் வழிகாட்டுதலில் மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தற்போது மரக்கறி மற்றும் பழமர செய்கைக்கு கூடிய கவனம் எடுக்கப்பட்டு வருகின்றன.
.இந்த விசேட திட்டத்தில் மரக்கறிஇமற்றும் பழமர செய்கைக்குஆர்வம் காட் டும் குடும்பங்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் மற்றும் விதைகளை பெற் றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மாவட்டசெயலகத்தின் அரச ஊடகப்பிரிவுத்தகவல் தெரிவிக்கின்றது.
இதற்கமைய மாவட்ட செயலக வளவில் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் முதல்கட்ட நடுகை செய்வதற்காக மட்டக்களப்பு எகெட் கரித் தாஸ் தொண்டார்வநிறுவனத்தின் அனுசரணையில் சுமார் ஆயிரம் இலவச மரக்கறி மரக்கன்றுகள் மற்றும் விதைபொதிகள் பிரதேச செயலாளர் களிடம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா வழங்கி வைத்தார்.
இதன்போது எஹெட் கரித்தாஸ் நிறுவன பணிப்பாளர் அருட்தந்தை ஏ.ஏ. அலெக்ஸ் ரொபர்ட் அடிகள் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணிய மூர்த்தி,உள்ளக கணக்காய்வாளர் திருமதி இந்திரா மோகன், எஹெட் கரித்தாஸ் நிறுவன பணிப்பாளர் அருட்தந்தை ஏ.ஏ.அலெக்ஸ் ரொபட் மற்றும் பிரதேச செயலா ளர்களும் பிரசன்ன மாகியிருந்தனர்.
இந்த விசேடதிட்டத்தில் செய்கைபண்ணப்படும் உற்பத்திகளை விவசாய திணைக்கள உத்தியோகத்தர்குழு கட்டம் கட்டமாக மேற்பார்வைசெய்ய வுள்ளதாக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் மாவட்ட செயலகத்தின் அரச ஊடகப் பிரிவுக்கு தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment