(ஜனா)
மட்டு நகரில் பண்டிகை வியாபாரம் செய்த வியாபார நிலையங்களுக்கு பூட்டு: மாநகர முதல்வரின் அதிரடி
கொரானா நோய்த்தொற்றின் அபாயம் காரணமாக தேசிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டமானது வியாழக்கிழமை (09.04.2020) காலை 6 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை தளர்த்தப்பட்டிருந்தது.
இவ்வேiளையில் மட்டக்களப்பு மாநகரசபைக்குள் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட வேண்டும் என்று மாநகரசபை மற்றும் மாவட்ட கொரணா ஒழிப்பு செயலணியினால் அறிவிப்புகள் வழங்கப்பட்டிருந்தது.
இருந்தும் இவ் அறிவிப்புகளை மீறும் வகையில் ஆடை, அழகுசாதனப் பொருட்கள், உணவகங்கள் உட்பட சில அத்தியாவசிய பொருட்கள் அல்லாத விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டு சித்திரைப் புத்தாண்டுக்கான விற்பனைகளை இடம்பெற்றன.
அதனை தொடர்ந்து குறித்த விற்பனை நிலையங்களுக்கு நேரடி விஜயத்தினை மேற்கொண்ட மாநகர முதல்வர் உடனடியாக மூடுவதற்குரிய பணிப்புரைகளையும் விடுத்ததோடு, உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மாநகர ஆணையாளருக்குப் பணிப்புரை விடுத்தார்.
மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு அரசாங்கம் தொடர்ச்சியாக அறிவுறுத்தல்களை வழங்கிவரும் நிலையில் இவ்வாறு செயற்படும் ஒருசில வர்த்தகர்களினால் கொரனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பாதிப்புகள் ஏற்படலாம் எனக் குறிப்பிட்ட மாநகர முதல்வர்.
இக்காலத்தின் நிலையை உணர்ந்து மனித உயிர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பொதுமக்களும் சித்திரைப் புத்தாண்டினை தத்தம் குடுப்பத்தினரோடு மாத்திரம் மிக எளிமையான முறையில் கொண்டாடுமாறும் மாநகர முதல்வர் கேட்டுக் கொண்டார்.
0 Comments:
Post a Comment