(அஸ்ஹர்)
கல்முனை மாநகர முதல்வர் கெளரவ சட்டத்தரணி ஏ.எம்.றகீப் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு.
கல்முனை மாநகர சபை எல்லைக்குள் நிர்மாணிக்கப்பட்டு வரும் அனுமதி பெறப்படாத மற்றும் அனுமதி பெறப்பட்ட சகல கட்டிட நிர்மாணப் பணிகளையும் இடைநிறுத்துமாறும் அதனை மீறி செயற்படும் வீட்டு உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று இடம்பெற்ற கொரணா வைரசுவினை கட்டுப்படுத்தல் தொடர்பாக ஆராயும் கூட்டத்தினை தொடர்ந்து அறிவித்தார்.
நாட்டில் தற்போது ஊரடங்கு சட்டம் அமுலில் இருப்பதாலும் அரச அலுவலகங்கள் இயங்காமலிருப்பதனையும் சாதகமாக பயன்படுத்தி சிலர் இவ்வாறான கட்டிட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கல்முனை மாநகர சபைக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.
இவ்வாறான சட்ட விரோத கட்டிட நிர்மாண பணிகள் இடம்பெற்றால் அவை எந்தவித முன்னறிவித்தல் இன்றி உடைக்கப்படும் என்று தெரிவித்த முதல்வர் வீதியோரங்களில் குவித்து வைக்கப்பட்டு போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் கட்டிட இடிபாடுகள் மற்றும் கட்டிட பொருட்களை உடனடியாக அகற்றுமாறும் வீட்டு உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டார். இதனை மீறும் பட்சத்தில் அந்த கட்டிட பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment