(துசா)
மண்முனைதென்மேற்கு பலநோக்கு கூட்டிறவு சங்கத்தினால் அரசடித்தீவில் கிராமிய வங்கி, மினிகோப் சிற்றி போன்றன இன்றுசனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.
நீண்ட காலங்களாகஇயங்காமல் இருந்த இரு நிலையங்களும் மீண்டும் பிரதேச மக்களுக்கு சேவை வழங்கும் பொருட்டுதிறக்கப்பட்டன.மண்முனைதென்மேற்கு பலநோக்கு கூட்டிறவு சங்கத்தினால் அரசடித்தீவில் கிராமிய வங்கி, மினிகோப் சிற்றி போன்றன இன்றுசனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.
குறைந்த விலையில்பொருட்களை வழங்கும் நோக்குடன் மினிகோப் சிற்றியும், சேமிப்பு பழக்கத்தினைஊக்கிவிக்கும் பொருட்டும், வாழ்வாதார உதவிகளுக்கு நுண்கடன்களை வழங்கும் நோக்கிலும்கிராமிய வங்கியும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மண்முனைதென்மேற்கு பலநோக்கு கூட்டிறவு சங்கத்தின் தலைவர் அ.கருணாகரன் தலைமையில் நடைபெற்றநிகழ்வில், கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீமு.கு.சச்சிதானந்தக் குருக்கள், மாவட்ட கூட்டிறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் தங்கவேல்உள்ளிட்டோர் கலந்து கொண்டு இதனை திறந்து வைத்தனர்.இதன்போது,கூட்டிறவு சங்கத்தில் அங்கத்துவம் வகித்து நுண்கடனுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடன்பணமும்வழங்கி வைக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment