வீடு மற்றும் தொழில் வாய்ப்பு இல்லாதவர்களின் விபரங்கள் சேகரிப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் வீடு இல்லாமல் வாழ்ந்து வரும் மக்களின் விபரங்கள் சனிக்கிழமை (08) சேகரிக்கப்பட்டதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் வீடு இல்லாதவர்களும், தொழில் இல்லாதவர்களும், தமது சனிக்கிழமை தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர் இவ்விடையம் தொடர்பல் அவரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்…
எமது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகளை வழங்குவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடுகள் இல்லாமல் உறவினர்களின் வீடுகளிலும், ஓலைக் குடிசைகளிலும் வாழ்ந்துவரும் குடும்பங்களின் விபரங்களைச் சேகரித்துள்ளோம். அதுபோல் அரசாங்கம் கல்விப் பொதுத்தர சாதாரண தரத்திற்கக் கீழ் கற்றவர்களுக்கு துறைசார்ந்த தொழில் வாங்ப்பக்களை வழங்கவுள்ள இந்நிலையில் நாம் இன்றயத்தினம் கல்விப் பொதுத்தர சதாரணதரம், மற்றும் உயல்தரம் சித்தி பெற்று தொழில் இல்லாமல் இருப்பவர்களின் விபரங்களையும் சேகரித்துள்ளோம். அதற்கிணங்க இன்றயத்தினம் 4000 பேர் வீடு இல்லாதவர்களும். 3200 தொழில் வாய்ப்பு இல்லாதவர்களும் எம்மிடம் பதிவு செய்துள்ளனர்.
தற்போது இவ்விபரங்களை நாங்கள் சேகரிக்கின்றோம் அரசாங்கத்தில் காணப்படுகின்ற வெற்றிடங்கள் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் அனைவருக்கும் தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
தற்போது எமது கட்சிக்கு இலங்கை பூராகவும் அமோக வரவேற்பை மக்கள் வழங்கி வருகின்றார்கள். அதுபோல் மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர் யுவதிகள், மற்றும் மகளிர் அணி என்பன மும்முரமாகச் செயற்பட்டு வருகின்றனர். என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment