மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரை பொலீஸ் விசாரணைக்கு வருமாறு ஏறாவூர் பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.
செங்கலடி பிரதேச செயலாளர் அவர்களுக்கு எதிராக மட்டக்களப்பு கச்சேரிக்கு முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியிட்டமை குறித்து பிரதேச செயலாளர் அவர்களினால் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் செ.நிலாந்தனை ஏறாவூர் பொலிஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் செய்திகளை வெளியிட்டு வரும் சுதந்திர ஊடகவியலாளர் நிலாந்தன் மீது கடந்த காலங்களில் பல தடவைகள் இதுபோன்ற பொலீஸ் விசாரணைகள் நான்கு தடவைக்கு மேல் நடைபெற்றுள்ள நிலையில் தற்போது மீண்டும்; விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
ஊடகவியலாளர் நிலாந்தன் மீதான விசாரணைக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment