புளுகுணாவை குளத்தின் வான்கதவுகளும் திறப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவருகின்ற அடை மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள குளங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புளுகுணாவை குளத்தின் வான்கதவுகள் நான்கு இன்று(02) திங்கட்கிழமை திறக்கப்பட்டன.
குளத்தின் நீர்மட்டம் 29அடிக்கு மேல் உள்ளதனாலும், தொடர்ச்சியாக மழை பெய்துகொண்டிருப்பதினாலும் குறித்த குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் உள்ள தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையுடன், பாதிக்கப்பட்ட மக்கள் பலர் நலன்புரி முகாம்ங்களிலும் தங்கியுள்ளனர்.
உன்னிச்சைக் குளத்தின் வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment