அடை மழையால் ஆயிரக் கணக்கான அன்றாடங் காய்ச்சிகள் தொழிலிழப்பு.
மட்டக்களப்பு உட்பட கிழக்கு மாகாணம் முழுவதும் சமீப சில நாட்களாகப் பெய்து வரும் அடை மழையினால் ஆயிரக் கணக்கான அன்றாடங் காய்ச்சிகள் தொழிலிழந்து பாதிக்கப்பட்டிருப்பதாக தன்னார்வத் தொண்டர் அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
நாளாந்தக் கூலி வேலை ஆட்களும், சைக்கிள்களில் பொருட்களை எடுத்துச் செல்லும் இடம்பெயர் சிறு வியாபாரிகளும் முழுiமாயகத் தங்களது வருமானத்தை இழந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
இதில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளதாக தன்னார்வத் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அடை மழையில் தொழிலுக்கும், சிறு வியாபாரத்திற்கும் செல்ல முடியாத நிலையில் பலர் வீட்டோடு முடங்கி பசி பட்டினியோடு காலங்கழிப்பதாகவும் பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.
அரசாங்க சுற்றுநிருபத்தின்படி இடைத்தங்கல் முகாம்களில் இருப்போருக்கு மாத்திரமே உணவும், இன்னபிற உதவிகளும் கிடைக்கும் என்பதால் பல்வேறு காரணங்களின் நிமித்தம் வீடுகளில் முடங்கி தொழிலிழந்து பாதிக்கப்பட்டிருப்போர் தாம் நிர்க்கதியாகியுள்ளதாகவும்; தமக்கு நிவாரண ஏற்பாடுகள் ஏதுமில்லை என்றும் கவலை தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment