மாவடி ஓடை அணைக்கட்டு உடையும் அபாயம் இல்லை – நீர்பாசன திணைக்களத்தின் பணிப்பார் நாயகம் பொறியியலாளர் மோகனராஜா.
அமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின மாவடிஓடை பாலம் உடையும் அபாயம் உள்ளதாக கருத்துக்கள் வெளிவந்திருந்த அதில் எதுவித உண்மையும் இல்லை என நீர்ப்பாசன பணிப்பாசன பணிப்பாளர் நாயகம் சீனித்தம்பி மோகனராஜா செவ்வாய்க்கிமை (24) தெரிவித்தார்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதான காரியாலயத்திலிருந்து பணிப்பாளர் நாயகத்தின் தலைமையிலான நிபுணத்துவ பொறியியலாளர்குழு வொன்று செவ்வாய்க்கிழமை (24) நேரடி விஜயம் செய்துள்ளது. இக்குழு அனத்தங்களைப் பார்வையிட்டு வருவதுடன், எதிர்காலத்தில் ஏற்படும் வெள்ள அனர்தங்களிலிருந்து எவ்வாறு பாதுகாத்தல், திடீரென வெள்ளம் ஏன் வந்தது, குளங்களிலும், அணைக்கட்டுகளிலும் எவ்வகையான திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும், என்பது தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றது.
இக்குழு செவ்வாய்கிழமை (24) மட்டக்களப்பு மாவடி ஓடை பாலத்திற்கும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளது. அதனைப் பார்வையிட்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்…
மாவடி ஓடைப்பாலத்தின் அணைக்கட்டு உடையவில்லை. அது அணைக்கட்டாகவேதான் இருக்கின்றது. ஆனால் அணைக்கட்டுக்கு இருபக்கமும் இடப்படும் மண்கட்டு வெள்ளநீதினால் கழுவிச் செல்லப்பட்டு அரிப்பெடுத்துள்ளது. இந்நிலமையை உடன அவதானித்த எமது பொறியியலாளர் குழு இராணுவத்தினரதும், அப்பகுதி விவசாயிகளினதும் ஒத்துழைப்புடன் அந்த அரிப்பைத் தடுத்துள்ளார்கள். மாறாக அக்கட்டு உடைப்பெடுக்கவில்லை. இவ்விடையம் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
எனவே மாவடி ஓடை அணைக்கட்டுக்கு எதுவித பிரச்சனையும் இல்லை அது அவ்வாறே இருக்கின்றது. அந்த அணைக்கட்டிற்கு பக்கவடிட்டில் இடப்படும் மண் அணை அப்பகுதியில் வந்த 14 அடி வெள்ள நீரினால் தோண்டப்பட்டு, அந்த மண் கட்டு அரிக்கப்பட்டுள்ளது. அதனை எமது பொறியியலாளர் குழு மாவடி ஓடை இராணுவத்தினரும், விவசாயிகளும் ஒன்றிணைந்து திருத்திக் கொண்டிருக்கின்றோம்.
அவ்வணைக்கட்டுக்கு எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் மேலதிக பாதுகாப்புக்கு சீட் பைல் இட்டு, மண் மற்றும், பெரிய கற்கள் இட்டு நிரப்பி பாதுகாப்பு வழங்குமாறு நாம் பரிந்துரை செய்து விட்டுச் செல்கின்றோம். என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment