கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் சிறுமுயற்சியாளர்களுக்கான வீதியோரவிற்பனை நிலையங்களை ஆரம்பித்து வைப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் சிறுமுயற்சியாளர்களுக்கான வீதியோரவிற்பனை நிலையங்களை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (28) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரினால் 40 கடைகள் வட்டவான் மாங்கேனி பனிச்சங்கேனி, காயங்கேனி, போன்ற இடங்களில் திறந்துவைக்கப்பட்டது.
இன் நிகழ்ச்சித்திட்டத்தினை அரசாங்க அதிபர் மா.உதயகுமாரின் ஆலோசனையில் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.ஹரன் அவர்களின் வழிகாட்டலில் வேல்ட்விஷன் லங்கா நிறுவனத்தின் முகாமையாளர் இ.பிரகாஷ்குமார் அவர்களின் நிதிஉதவியுடன் 40 கடைத்தெருக்கள் மக்களிடம் திறந்துகையளிக்கப்பட்டது.
இதன்போது அரசாங்க அதிபர் உரையாற்றுகையில் அபிவிருத்தி என்பது ஒவ்வொரு தனிநபர்களின் வளர்ச்சியில்தான் தங்கியுள்ளது.
அந்தவகையில் தங்களின் பிரதேசங்களின் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களுக்கு தனியானசந்தை பெறுமான இருக்கின்றது. அந்தவகையில் உங்களினால் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களை நீங்களாக வேவிற்பனைசெய்து இலாபத்தினை பெற்றுநீங்கள் எல்லோரும் பயனடையவேண்டும் என வேண்டிக் கொண்டார்.
0 Comments:
Post a Comment