11 Sept 2019

1991 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க தேசிய கல்வி ஆணைக்குழு சட்டத்தின் பிரகாரம், ஒரு ஆசிரியர் அமத்துகை என்பது பயிற்சியின் பின்னரே இடம்பெற வேண்டும்

SHARE
1991 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க தேசிய கல்வி ஆணைக்குழு சட்டத்தின் பிரகாரம், ஒரு ஆசிரியர்  அமத்துகை என்பது பயிற்சியின் பின்னரே இடம்பெற வேண்டும்.
பயிற்சியின் பின்னர் நியமனம் வழங்கப்டுகின்ற ஆசிரியர்கள் பயிற்சியின் முன்னர் நியமனம் வழங்கப்படுகின்ற ஆசிரியர்கள். ஆசிரியர் நியமனங்களை நோக்கலாம். அதவது  1991 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க தேசிய கல்வி ஆணைக்குழு சட்டத்தின் பிரகாரம், ஒரு ஆசிரியர்  அமத்துகை என்பது பயிற்சியின் பின்னரே இடம்பெற வேண்டும் என்பது சட்டரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் எற்றுக் கொள்ளப்பட்ட விடையம். அதாவது தேசிய கல்விக் கல்லூரிகளிலிருந்து வெளியேறும் அசிரியர்களும், கல்விமானிப் பட்டம் பெற்று வெளியேறும் ஆசிரியர்களுமே ஆசிரிய அமத்துகைக்குட்படுத்தப்படுதல் வேண்டும். அவ்வாறானவர்களுக்கு மாத்திரமே ஆசிரியர் நியமனம் வழங்கப்படுதல் வேண்டும் என்ற விடையம் சட்ட ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தபோதும், 1991 ஆம் அண்டுக்குப் பின்னரேயே பெருமளவான ஆசிரியர்கள் இதற்கு எதிராக உள்வாங்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். 

என மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் பீடாத்திபதி கி.புண்ணியமூர்த்தி தெரிவித்துள்ளார். 

கல்வி அமைச்சின் அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசலை தேசிய வேலைத்திட்டத்தின கீழ் பட்டிருப்பு வலய ஆசிரியர் வாண்மை விருத்தி மத்திய நிலைய புதிய கட்டடத் திறப்பு விழா திங்கட்கிழமை (09) நடைபெற்றது. பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…


அதாவது எந்தவித பயிற்சியும் இல்லாமல் ஆசிரியர்கள் சேவைக்கு அமரத்தப்படுகின்றார்கள். குறிப்பாக அண்மையில் வழங்கப்பட்ட தொண்டர் ஆசியரியர்கள் உட்பட அனைத்து ஆசிரியர் நியமனங்களும், சட்டத்திற்குப் புறம்பானதாகவும், கல்விக் கொள்கைகளுக்கு ஏற்புடையதாக அல்லாமலும், இடம்பெறுவது அரசியல் தலையீடு, கல்வியில் இடம்பெறுவதற்கு முக்கிய சான்றாகும். 

எனினும் இவ்வாறு நியமிக்கப்படுகின்ற ஆசிரியர்களை வாண்மை உள்ளவர்களாக உருவாக்குவதில் ஆசிரிய மத்திய நிலையங்கள் வெகுவான பங்களிப்புச் செய்கின்றன. நாடு முழுவதும் 100 ஆசிரிய மத்திய நிலையங்கள் உருவாக்கப்பட்டன, அவை வலயக் கல்வி காரியாலயங்களின் நிருவாகத்திற்கும், தேசிய கல்விக் கல்லுரிகளின் மேற்பார்வைக்கும், உட்பட்ட வகையில் செயற்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டன. எனினும் அனைத்து இடங்களிலும் தேசிய கல்விக் கல்லூரிகள் இல்லாத காரணங்களினால், இந்த ஆசியரிய மத்திய நிலையங்கள் வலயக்கல்வி அலுவலகத்திக் நிருவாகத்தின் கீழ் தற்போது காணப்படுகின்றது. 

எதிர்வரும் 25 ஆம் திகதி நாடுமுழுவதும் 8000 ஆசிரியர் பயிலுனர்களை கல்விக் கல்லூரிகளுக்கு உள்வாங்குகின்ற தேசி ரீதியில் நடைமுறைப்படுத்தவுள்ளோம். முன்னெப்போதம் இல்லாத வகையில் 2016, 2017 ஆகிய இரண்டு வருடங்களையும் உள்ளடக்கி இரட்டிபப்hன ஆசிரிய பயிலுனர்கள் உள்வாங்கப்படவுள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் ஆசியரிய மத்திய நிலையங்களிலுள்ள வளவாளர்களையும் பயன்படுத்துமாறு எங்களுக்கு அறிவுலுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நாங்கள் எதிர்காலத்தில் ஆசிரிய மத்திய நிலையங்களுடன் இணைந்து செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம். 

ஆசிரியர்களுக்காகு வாண்மைத்துவப் பயிற்சிகள் மிகவும் காத்திரமானதாக வடிவமைக்கப்படுதல் வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களிடத்தில் தனியாள் வேறுபாடுகளை இனம்காணாமல் பொதுவான நோக்கில் கற்பிக்கின்ற ஒரு செயற்பாடு தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. மாணவர்களிடத்தில் இருக்கின்ற விசேட தன்மைகளை அறிந்து அவர்களுக்குத் தகுந்த கல்வி ஊட்டக்கூடிய ஆசிரியர்களுக்குரிய வாண்மைத்துவப் பயிற்சிகள் வழங்கப்படுதல் வேண்டும்.  

உலகளாவிய ரீதியில் பின்லாந்து நாட்டின் கல்விதான் முக்கியத்துவம் பெறுகின்றது. அதற்கு காரணம் அங்கு மாணவர்கள் 7 வயதிலே பாடசாலைக்கு உள்வாங்கப்படுகின்றார்கள். அங்கு மாணவர்கள் ஒப்பிடப்படுவதில்லை, மாணவர்களுக்கு வீட்டு வேலைகள் இல்லை, பரீட்சைகள் இல்லை, மாணவர்கள் விளையாட்டுக்களின் அடிப்படையிலேயே கற்பிக்கப்படுகின்றார்கள். தற்போது சர்வதேச ரீதியாக நடைபெறுகின்ற போட்டிப் பரீட்சைகளில் பின்லாந்து நாடுதான் முதலிடம் வகிக்கின்றது. இதற்கு காரணம் அங்கு கற்பித்தல் ஒரு விளையாட்டாக இடம்பெறுவததான். 

இலங்கையில் பரீட்சை மையமும், வெறுமனே அறிவுக்கு மாத்திரம் முதன்மை கொடுக்கின்ற சூழலும், வெறுமனே போதனைகளும், வாசிப்புப் பாடங்களாக கற்பிக்கப்படுவதும்,  பாரிய குறைபாடாக இருக்கின்றது. இவ்வாறு இந்நிலமை தொடர்ந்து கொண்டிருந்தால் எமது மாகாணம் தொடர்ந்து 9 வது இடத்திலிருந்து மீட்சிபெற முடியாது. வடமேல் மாகாணம் தற்போது கல்வியில் முன்னேற்றமடைவற்குக் காரணம் அவர்கள் கொழும்பு பல்கலைக் கழகத்துடன் இணைந்து செயற்படுகின்றார்கள். கொழும்பு பல்கலைக் கழகத்தில் தேசிய ரீதியில் இடம்பெறுகின்ற ஆய்வுகளை மையமாகக் கொண்டு, அவர்களது கல்வி வலயத்தையும், மாணவர்களையும் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்கின்றார்கள். ஆகவே நாங்கள் எங்களது போக்கிலிருந்து மாற்றம் பெறவேண்டும், ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் அடிப்படைரீதியில் மாற்றம் பெறவேண்டும். வெறுமனே விரிவுரையாளர்களாக அல்லாமல் செயற்பாட்டு ரீதியான கற்றல் கற்பித்தல் ரீதியான செயற்பாடுகளுக்கு நாங்கள் மாறவேண்டும். அவ்வாறு மாறாவிட்டால் இவ்வாறான எத்தகைய மத்திய நிலையங்கள் உருவாக்கினாலும், எந்த பிரயோசனமும் இல்லை. எனவே 21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றவகையில் சர்வதேச ரீதியான போக்குகளை மையமாகக் கொண்டு  செயற்பாட்டுடன் ரீதியான கற்றல் பற்பித்ததை மாற்றியமைக்கும் நோக்கில் மாறுவோம் என உறுதிபூணுவோம் என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: