24 Jul 2019

அமைச்சர் சஜித் சூபிரேமதாச அவர்களினால் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு புரட்சியின் அங்கமாக.

SHARE
அமைச்சர் சஜித் சூபிரேமதாச அவர்களினால் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு புரட்சி.
அமைச்சர் சஜித் சூபிரேமதாச அவர்களினால் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு புரட்சியின் அங்கமாக. மட்டக்களப்பு மாவட்ட சஜித் பிரேமதாச அவர்களின் இணைப்பாளரும் ளுPபு அணியின் மாவட்ட தலைவருமாகிய  ம.ஜெகவண்ணனிக் அயராத முயற்சியினால் இதுவரை வீட்டுத்திட்டங்கள் காணப்படாத பிரதேசத்திற்கும் புதிய வீட்டுத்திட்டங்கள் அமையவுள்ளன.

அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் வீடமைப்புத் திட்டத்திற்காக 11 வீட்டுத்திட்டத்திற்கான காணி வழங்கப்பட்டுள்ளன.
அத்தோடு 15 புதிய வீட்டுத்திட்டத்திற்காக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இடங்களில் புதிய வீட்டுத்திட்டத்தினையும் அமைப்பதற்காகவும் அண்மையில் அமைச்சர் அவர்களினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதற்குரிய வேலைத்திட்டங்கள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. அந்தவகையில் இதன் மொத்தப் பெறுமதியாக ஒரு வீட்டுத்திட்டத்தில்  25 வீடுகள் வீதம்,  மொத்தம் 26 வீட்டுத்திட்டங்கள் அமையப் பெறவுள்ளன. இதற்காகவேண்டி 48 மில்லியன் ஏழு இலட்சத்து ஜம்பதாயிரம் ரூபா நிதி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச அவர்களின் இணைப்பாளரும் எஸ்.பீ.ஜீ அணியின் மாவட்ட தலைவருமாகிய  ம.ஜெகவண்ணன் தெரிவித்துள்ளார்.







SHARE

Author: verified_user

0 Comments: