4 Jul 2019

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி விஞ்ஞான கண்காட்சியும், சஞ்சிகை வெளியீட்டு விழா

SHARE

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலையின் விஞ்ஞான கண்காட்சியும், “மிக்கேலின் விஞ்ஞானக்குரல்” சஞ்சிகை வெளியீட்டு விழாவும் வியாழக்கிழமை (04.07.2019) காலை கல்லூரியின் முதல்வர் பயஸ் ஆனந்தராஜா தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாரும், கௌரவ அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்வி பணிப்பாளர்(நிருவாகம்) திருமதி. சுஜாதா குலேந்திரகுமாரும், சிறப்பு அதிதியாக வலயக்கல்வி அலுவலகத்தின் விஞ்ஞானப்பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் ரீ.ஞானசேகரம் உட்பட பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது மாணவர்களின் ஆற்றல்களையும், திறமைகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட சுமார் 100 மேற்பட்ட விஞ்ஞான ரீதியான விடயங்கள் கண்காட்சியில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றுவரும் இக் கண்காட்சியினை பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், மற்றும் நலன்விரும்பிகளும் பார்வையிட்டனர். 

Author: verified_user

0 Comments: