மட்டக்களப்பில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுதாரியின் உடலைப் புதைப்பதற்கு மக்கள் ஆர்ப்பாட்டம்.
மட்டக்களப்பு மாநகரத்திற்குட்பட்ட பாரதி வீதியில் அமைந்துள்ள மயானத்தில் கடந்த ஏப்ரல் 21 இல் மட்டக்களப்பு சியோன் தேவலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுதாரியின் உடற் பாகங்களைப் புதைப்பதற்கு அப்பிரதேச மக்கள் சனிக்கிழமை (21) தெரிப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுடுபட்டனர்.
இதன்போது அப்பிரதேச மக்கள் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். இதன்போது வீதியல் டயர் இட்டு எரித்தும், வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த தற்கொலையாளியின் உடற் பாகங்களை புதைப்பதற்கு நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் மக்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment