18 Jun 2019

மட்டக்களப்பில் சூறைக்காற்றினால் சேதப்பட்ட வீடுகளுக்கு தலா 10 ஆயிரம் இழப்பீடு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை.

SHARE
மட்டக்களப்பில் சூறைக்காற்றினால் சேதப்பட்ட வீடுகளுக்கு தலா 10 ஆயிரம் இழப்பீடு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை.
அதிக நாள் வ(ர)றட்சிக்குப் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை, மாலை 16,17) நிலவிய பலத்த இடிமின்னல், மழையுடன் கூடிய சூறைக்காற்றினால் வீடுகள், கட்டிடங்கள், மரங்கள் என்பனவற்றுக்குச் சேதம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இலுப்படிச்சேனை, கொத்தியாபுலை, தாண்டியடி, காஞ்சிரங்குடா, புதுமண்டபத்தடி உள்ளிட்ட இன்னும் சில பகுதிகளில்  வீசிய சூறைக்காற்றினால் அங்கிருந்த சுமார் 62 இற்கு மேற்பட்ட வீடுகளின் கூரைகள் கழற்றி வீசப்பட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். அதேவேளை ஏராளமான பயன்தரும் மரங்களும் சரிந்து வீழ்ந்துள்ளன.

அதிகாரிகளுக்கு சேத விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட தங்கள் இடங்களுக்கு அதிகாரிகள் வருகை தந்து பார்வையிட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட  பகுதிகளுக்கு திங்களன்று 17.06.2019 கள விஜயம் மேற்கொண்ட அதிகாரிகள், சேத விபரங்களை ஆராய்ந்ததோடு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளரின் பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.ஏ. ஷியாத், மாவட்ட அனர்த்த ஒருங்கிணைப்பாளர் ஆர்.சிவநாதன், மண்முனை மேற்கு பிரதேச செயலக அனர்த்த நிவாரண உத்தியோகத்தர் என்.சிவநிதி உட்பட  கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர்

இதன்போது சேதமடைந்த வீடுகளுக்கு முதற்கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் நிதி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.








SHARE

Author: verified_user

0 Comments: