28 May 2019

இந்த அரசாங்கத்தை பாதுகாப்பதற்க்கு போராடும், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் ஏன் கன்னியா வெந்;நீரூற்றை பாதுகாக்க முன்வரவில்லை?

SHARE
இந்த அரசாங்கத்தை பாதுகாப்பதற்க்கு போராடும், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் ஏன் கன்னியா வெந்;நீரூற்றை பாதுகாக்க முன்வரவில்லை?
தமிழ் மக்கள் கூட்டணி திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் நந்தகுமார் கேள்வி
இந்த அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்;குப் போராடும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் ஏன் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள கன்;னியா வெந்;நீரூற்றை பாதுகாக்க முன்வரவில்லை?
என தமிழ் மக்கள் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரும் திருகோணமலை நகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினருமான சிவசுப்பிரமணியம்  நந்தகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை 28.05.2019 அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்த அரசாங்கத்தின் எதிர்காலம் தங்கள் கைகளில் உள்ளதாக கூறிக்கொள்ளும் இரா. சம்பந்தன் அரசுடன் உள்ள நல்லுறவைப் பயன்படுத்தி திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று பெருமை மிக்கதும்  இந்துக்கள் வரலாற்றுடன் ஒன்றித்து போனதுமான  இதிகாச புராண காலத்திற்கு அப்பாற்ப்பட்டதுமான வரலாற்றை  கொண்ட ஒரு பிரதேசத்தை, தொல்பொருள் திணைக்களம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி கபளீகரம் செய்ததை ஏன் தடுக்க முடியவில்லை.?
இதற்கான காரணத்தை தமிழ் மக்களுக்கு அவர் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனபரிபாலன திணைக்களம், கரையோர அபிவிருத்தி மற்றும் செயற்பாடுகளிற்கான திணைக்களம், வீடமைப்பு அதிகார சபை என்பன தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்பட்டு வருகின்றன.

இத் திணைக்களங்களின் மறைமுக நிகழ்ச்சி நிரலாக (ர்னைனநn யுபநனெய) தமிழ் மக்களின் விவசாய நிலங்களை அபகரிப்பதும் தமிழ் மக்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த மேய்ச்சல் தரைகளை அபகரிப்பதும் தமிழ் மக்களின் வரலாற்றுடன் தொடர்புபட்ட புனித தலங்கள், கோயில்களில் பௌத்தமத வழிபாட்டு சின்னங்கள் உள்ளதாக கூறி, ஆலய நிலங்களை அபகரிப்பதும், தமிழ்மக்களிற்கு நன்மையளிக்க கூடிய அபிவிருத்தி திட்டங்களை கட்டிட நிர்மாணங்களை தடுப்பதும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் இனப்பரம்பலை தடுக்குமுகமாக தமிழ் பிரதேசங்களில் ஊடறுத்து சிங்கள குடியேற்றங்கள் நிறுவுவதையும் நோக்கமாக கொண்டு செயற்பட்டு வருகின்றன.
இதற்கான ஆதாரங்கள் நிறையவே உண்டு. இவ்வாறு எதிர்காலத்தில் இந்நாட்டில் வாழும் குறித்த இன மக்களிற்கு எதிராக இந்த அரச நிறுவனங்கள் செயற்படுவதை நிறுத்த வேண்டும்.

கன்னியா வெந்நீரூற்று பிரதேசத்தில் தமிழ்மக்கள் இந்துக்கள் சுதந்திரமான முறையில் தமது காரியங்களையும் மத சடங்குகளையும் மேற்கொள்ள உள்ள தடைகள் அகற்றப்படுவதோடு கன்னியா வெந்நீரூற்று பிரதேசம் தொல்பொருள் ஆய்விற்கு உட்பட்டது என்ற தீர்மானம் இரத்துச் செய்யப்பட வேண்டும் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.        

SHARE

Author: verified_user

0 Comments: