20 May 2019

வடக்கு கிழக்குவாழ் தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் திகழ்ந்து ஒன்றுபட வேண்டிய தேவை எழுந்துள்ளது.

SHARE
எமது இறுதி யுத்தம் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றும் அதில் ஆயிரக்காணக்கானோர் பலியாகினர். அந்த யுத்தம் முடிவுற்று 10 வருடங்கள் கழிந்துள்ள நிலையில் முள்ளி வாய்க்கால் நினைவு தினம் அனுஸ்ட்டிக்கப்படுகின்ற 10வது ஆண்டிலாவது வடக்கு கிழக்குவாழ் தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் திகழ்ந்து ஒன்றுபட வேண்டிய தேவை எழுந்துள்ளது. “நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதானால் நாங்கள் அனைவரும் அதற்குள் சிறியவர்கள்” என்ற கருத்துப்பட நாங்கள் கடந்த கால போதனைகள் எமக்கு வழங்கப்பட்டுள்ளன. அதற்கு ஏற்றாற்போல் வடக்கு கிழக்குவாழ் தமிழ் மக்கள் அனைவரும் வெவ்வேறு திசைகளில், வெவ்வேறு கோணங்களில் பயணிக்காமல், அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் ஓரணியில் செயற்பட வேண்டும். 
என ஜனநாயகப் பொராளிகள் கட்சியின் மட்டு அம்பாறை மாவட்ட ஊடகப் போச்சாளர் ச.சாந்தன் தெரிவித்துள்ளார். ஜனநாயகப் போராளிகள் கட்சி ஏற்பாடு செய்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு மட்டக்களப்பு வெல்லாவெளியில் சனிக்கிழமை (18) இடமபெற்றது இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….

இனிவரும் காலங்களில் தமிழ்பேசும் மக்கள் தங்களுடைய அபிலாசைகளோ, யாருக்கும் அச்சமில்லலாமல், பிச்சையில்லாமல், தங்களைத் தாங்களே ஆளுகின்ற ஆட்சியதிகாரத்தோடு இந்த மண்ணிலே வாழவேண்டும் என்ற நோக்கத்தோடு, இந்த மக்கள் ஒன்று;டு உழைத்தவர்கள். அந்த உழைப்பின் பிரகாரம் இறுதி யுத்தகாலத்தின் முடிவிலே எமது மக்கள் மிக மோசமாக படுகொலை செய்யப்பட்டார்கள். எனவே தற்போதைய காலகட்டத்தில் இவ்வாறான நிகழ்வுகளை தற்போதிருக்கின்ற எமது சந்ததியினரின் கையில் கொடுக்க வேண்டும் என்பதோடு எமது மண்ணிலே நடந்த நிகழ்வுகள் அத்தனையையும், எமது அடுத்த சந்ததியினருக்குப் பதிவு செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது. 18880 சதுரக் கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட வடக்கு கிழக்கு தாயக மண்ணிலே எமது மக்களின் நிரந்தரமான, பிறப்புரிமை, சுயநிர்ணய உரிமையின், அடிப்படையில் வாழ்வதற்காக எமது மக்கள் கடந்h காலங்களிலிருந்து ஒருமித்து பயணித்தார்கள் என்பதில் மாற்றமில்லை. 

எனவே நாங்கள் அனைவரும் ஒமித்து மரணித்த எமது மக்களின் எண்ணங்களை ஈடேற்றுகின்ற, அவர்களின் எண்ணங்களுக்குச் செயல் வடிவம் கொடுக்கின்றவர்களாக நாங்கள் அனைவரும் மாற்றமடைய வேண்டும். நாங்கள் வெவ்வேறு சிந்தனைகளுடன், வெவ்வேறு பாதைகளில் பயணிப்பதனால் ஒன்றையும் சாதித்துவிட முடியாது. அது நடைமுறைச் சாத்தியமற்றவிடையம். ஆகவேதான் “ஏற்றத்தாழ்வற்ற வர்க்க சாதி முரண்பாடற்ற பெண்ணடிமைத்தனமற்ற ஒரு புரட்சிப்பாங்கான எமது இலக்கை நோக்கி ஒருமித்து நாங்கள் அனைவரும் பயணிக்க வேண்டிய தேவை இருக்கின்றது” அவ்வாறுதான் பயணிக்க வேண்டும் என்பதனையும், எமது மக்கள் கடந்த காலங்களிலிருந்து சொல்லியிருக்கின்றார்கள். என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: