உலக ஓட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு ஊடகவியலாளர்களுக்கும்,பெற்றோர் களுக்கும் பயிற்சி பட்டறை மட்டக்களப்பில் இடம்பெற்றது.
உலக ஓட்டிச நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெற்றோர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் பயிற்சி பட்டறை ஒன்று "தீரணியம்" ஓட்டிசம் ஸ்பெக்ட்ரம் சீர்கேடு நிலையத்தில் வெள்ளிக்கிழமை(5)காலை 9.00 மணி தொடக்கம் பகல் 12.00 மணிவரை நடைபெற்றது.
தீரனிய நிலையமானது 2017 ஏப்ரல் மாதம் தொடக்கம் இயங்கி வருகின்றது.ஓட்டிசம் ஸ்பெக்ட்ரம் சீர்கேடு உள்ள 40 சிறுவர்களை தற்போதுவரை இந்நிறுவனம் மட்டக்களப்பில் பராமரித்து வருகின்றது.
ஏப்ரல் 2 ஆம் திகதியானது உலக ஓட்டிசத்தை ஸ்பெக்ட்ரம் குறைபாடு விழிப்புணர்வு தினமாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியுள்ளது. இதனடிப்படையிலேயே இந்த பயிற்சி பட்டறை நடைபெற்றது.
இச்செயலமர்வில் ஓட்டிசம் எவ்வாறு உருவாகின்றது,அதன் அறிகுறிகள் பாதிப்புக்கள், ஓட்டிசத்தை நோயினை இனங்காணல்,பாதிக்கப்பட்ட சிறுவர்களை எவ்வாறு அரவணைத்தல்,குணப்படுத்தல் மற்றும் பராமரித்தல்,சிசிச்சை வழிகாட்டல்,பேச்சு சிசிச்சை,தொழில் வழி சிசிச்சை,புலலுணர்வு தூண்டலிற்கான பயிற்சிகள்,பெற்றோர் வலுவூட்டல் செயற்பாடுகள்,சமூகமட்ட விழிப்புணர்வு செயற்பாடுகள்,சமூகத்தில் அவர்களுக்குரிய உந்துசத்தியை ஊட்டுதல்,விஷேட தேவையுடைய சிறுவர்களினது நலன்கருதி அவர்களை கல்வி,விளையாட்டில் ஊக்குவித்தல்,உளரீதியான நெருக்கடிகள்,பிள்ளைகளை முறையாக கவனித்தல் போன்ற விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டது.
இச்செயலமர்வில் வைத்தியர் எஸ்.திருமால்,மட்டக்களப்பு தீரணியத்தின் ஆலோசகர் அருட்சகோதரர் ரீபன் உட்பட ஊடகவியலாளர்கள்,பெற்றோர்கள் கலந்துகொண்டார்கள்.
0 Comments:
Post a Comment