மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஓய்வூதியத் திணைக்களத்தின் நடமாடும் சேவை புதன்கிழமை 10.04.2019 மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறுபவர்களின் ஓய்வூதியப் பிரச்சினைகள் தொடர்பாக இங்கு தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தலைமையில் நடைபெற்ற நடமாடும் செயலமர்வில் ஜனாதிபதி செயலக உதவி செயலாளர் அருணி சோமரத்ன, ஓய்வூதியத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டப்ளியு ஜி.டப்ளியு. ஞானதயாளன், ஓய்வூதியத் திணைக்கள உதவிப் பணிப்பாள ஆர்.எம்.ஏ.ஐ. ரட்நாயக்க, மற்றும் ஓய்வூதியத் திணைக்கள அதிகாரிகள், ஓய்வூதிய அலுவலக உத்தியோகத்தர்கள், பயனாளிகளான ஓய்வூதியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment