திறமையான பெண் அழகான உலகினை படைக்கின்றாள் என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாமும் இரத்ததான நிகழ்வு தாண்டவன்வெளி பேர்டினண்ட்ஸ் மண்டபத்தில் வியாழக்கிழமை (21) நடைபெற்றது.
அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இவ் இரத்த தான முகாமின் ஆரம்ப நிகழ்வில், உதவி மாவட்டச் செயலாளர் ஆ.நவேஸ்வரன், மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.அருணாளினி சந்திரசேகரம், தொற்றா நோய்களுக்கான பிராந்திய வைத்தியப் பொறுப்பதிகாரி வைத்தியர் எஸ்.நவலோஜிதன், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதன், உளவள வைத்திய அதிகாரி திருமதி ஜே.யூடி, மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை இரத்த வங்கி வைத்திய அதிகாரி கே.விவேகானந்தநாதன் உள்ளிட்ட பலரும் அதிதிகளாகக்கலந்து கொண்டனர்.
இவ் இரத்ததான முகாமை அகம் நிறுவனம் , மகளிர் சம்மேளனம், அரச சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து நடத்தியிருந்தன.இதன் போது 100க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள், நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரச உத்தியோகத்தர்கள் என பலரும் இரத்தம் வழங்கினர்.
0 Comments:
Post a Comment