கிழக்கு மாகாண செயற்பாடுகளில் முற்றாக மாற்றத்தைக் கொண்டு வந்து கையளித்துவிட்டு தேசிய அரசிலுக்குள் மீண்டும் நுழைவேன் - கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
கிழக்கு மாகாண நிருவாக செயற்பாடுகளில் முற்றாக மாற்றத்தைக் கொண்டு வந்து கையளித்துவிட்டு தேசிய அரசிலுக்குள் மீண்டும் நுழைவேன் என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் பதவியேற்று முதன் முறையாக ஏறாவூருக்கு வருகை தந்த அவர் அபிவிருத்தித் திட்டங்களை ஞாயிற்றுக்கிழமை 24.03.2019 அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வுகளில் கலந்து nhகண்டு உரையாற்றினார்.
கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தற்போதைய தலைவருமான எம்.எஸ். சுபைரின் அழைப்பின் பேரில் இந்நிகழ்வுகள் இடம்டபெறறன.
நிகழ்வுகளில் முதலாவதாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக்கு 2 கோடி 44 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு வழங்குதற்கான கலந்தாலோசனைகள் இடம்பெற்றன.
அங்கு மேலும் உரையாற்றிய அவர்,
கிழக்கு மாகாணத்தில் ஆயிரக்கணக்கான அதிகாரிகள், ஆசிரியர்கள் இருந்தும் அந்த மாகாணம் தற்போது எல்லாவகையான அபிவிருத்திகளிலும் 9வது இடத்தையே தக்க வைத்துக் கொண்டுள்ளது,
அண்மையில் நான் எல்லாக் கல்வி அதிகாரிகளையும் அழைத்து பயிற்சிப் பட்டறை நடாத்தினேன்.
கிழக்கு மாகாணத்தில், ஒரு செயலாளருக்கு 4 மேலதிகச் செயலாளர்கள். ஒரு மாகாணப் பணிப்பாளருக்கு 4 மேலதிகப் பணிப்பாளர்கள், மாகாண கல்வி அமைச்சிலே 350 அதிகாரிகள், மாகாணக் கல்வித் திணைக்களத்திலே 200 அலுவலர்கள், 18 வலயக் கல்விப் பணிப்பாளர்கள், எல்லா வலயக் கல்வி அலுவலகத்திலும் ஆகக் குபுறைந்தது தலா 50 அலுவலர்கள், 49 பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், 1450 அதிபர்கள், 450 கல்விச் சேவை அதிகாரிகள், 21 ஆயிரம் ஆசிரியர்கள், இவ்வளவு அலுவலர்களும் இருக்கத்தக்கதாக கிழக்கு மாகாணம் கல்வி அடைவ மட்டத்தில் 9வது இடத்தில் உள்ளது என்றால் இதுபற்றி நாம் சிந்தித்து மாற்றம் கொண்டு வரக் கடமைப்பட்டுள்ளோம்.
எனவே, இந்த எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கான அதிகாரிகளும், ஆசியர்களும் இல்லாமல் விட்டிருந்தாலும் கிழக்கு மாகாணம் 9வது இடத்தைத்தான் தனதாக்கிக் கொண்டிருக்கும் ஏனென்றால் இலங்கையில் ஆக மொத்தத்தில் 9 மாகாணங்கள்தான் உள்ளன.
சுகாதார சௌக்கிய நல முன்னேற்றங்களிலும் கிழக்கு மாகாணம் 9வது இடத்தில்தான் உள்ளது.
சிலவேளை அதற்குக் கூடுதலான அளவு மாகாணங்கள் இருந்திருந்தாலும் கடைசி இடத்தில்தான் கிழக்கு மாகாணம் இருந்திருக்கக் கூடும்.
இது விடயமாக நிருவாக செயற்பாடுகளில், அதிகாரிகளின் மன நிலையில் உத்தியோகத்தர்களின் சிந்தனைகளில், ஆசிரியர்களின் போக்குகளில் மாற்றம் வேண்டும்.
அந்த மாற்றத்தை நோக்கியே நான் நகர்ந்து கொண்டிருக்கின்றேன்.
அடுத்த வருடம் ஜனவரிக்குள்ளாக நான் எனது ஆளுநர் பதவியை நிறைவு செய்யவுள்ளேன்.
அதற்கு முன்னதாக கிழக்கு மாகாணத்தை முழுமையான நிருவாக அபிவிருத்தி மாற்றங்களில் திட்டங்களை வகுத்து அவற்றைச் செயலுருப்பெறச் செய்து கையளித்து விட்டு நான் மீண்டும் மத்திய அரசியலுக்குள் சென்று பணியாற்றவுள்ளேன்.
மானாண சபையில் எந்த விதமான பாரிய நிதிகளும் இல்லை. ஆனால், மத்திய அரசின் ஒத்துழைப்புடன் வெளிநாட்டு கொடையாளி அரசாங்கங்களின் உதவியோடு கிழக்கு மாகாணத்திலுள்ள ஒவ்வொரு துறைகளையும் முன்னேற்றுவதற்கான ஒப்பந்தைங்களைச் செய்து இவ்வருட இறுதிக்குள் திட்டங்களில் சில நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கின்றேன்.
0 Comments:
Post a Comment