24 Mar 2019

பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ஆசீர்வாதம் வேண்டி இடம்பெற்ற விஷேட பூஜை வழிபாடுகள்

SHARE
பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ஆசீர்வாதம் வேண்டி இடம்பெற்ற விஷேட பூஜை வழிபாடுகள்
இலங்கை அரசாங்கத்தின் பிரதம மந்திரியும் ஜக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் 70 வது பிறந்ததினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் இன்று பல்வேறு சமய சமூகப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. பிரதமருக்கு ஆசீர்வாதம் வேண்டி இன்று வழிபாட்டுத் தலங்களில் விஷேட பூஜை இடம்பெற்றது.
மட்டக்களப்பு புளியந்தீவு ஆனைப்பந்தி  ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தில் இன்று நண்பகல் மட்டக்களப்பு ஜக்கிய தேசியக்கட்சி மாவட்ட முகாமையாளர் வீ.கே. லிங்கராஜா தலைமையில் பிரதமருக்கு ஆசிர்வாதம் வேண்டி சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றது.

புளியந்தீவு ஆனைப்பந்தி ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ நடராஜ சந்திரலிங்கக் குருக்கள் பூஜை வழிபாடுகளை நடாத்தி வைத்தார். இவ்வழிபாட்டு நிகழ்வுகளில் கட்சியின் ஆதரவாளர்கள் நகர சபை மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் காத்தான்குடி ஜக்கிய தேசியக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் என் முஸ்தபா உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.





SHARE

Author: verified_user

0 Comments: