(துஷி)
பெரியநீலாவணையில் மினிபஸ்மீது கல்வீச்சு
பெரியநீலாவணை பிரதானவீதியில் பயணித்த மினிபஸ் ஒன்றின் மீது கல்வீச்சு இடம்பெற்றதினால் பஸ்சின் முன் கண்ணாடி சேதமடைந்துள்ளதுடன் பஸ்சில் பயணித்த பயணிகள் காயம் எதுவுமின்றி தப்பியுள்ளனர்.
இச்சம்பவம் இன்று(19) திங்கட்கிழமை காலை 8.07 மணியளவில் நடைபெற்றுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி கிழக்கில் ஹர்த்தல் அனுஸ்டிக்கப்பட்டது. இந்நிலையில்மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களிலுள்ள தமிழ்க்கிராமங்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அக்கரைப்பற்றில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த தனியார் மினிபஸ் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் கல்வீச்சு மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதனால் அவ்விடத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
இச்சம்பவம் தொடர்பில் கல்முனைப் பொலிஸாருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment