மட்டக்களப்பு - மண்முனை பிரதான வீதி ஒல்லிக்குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பகல் 19.02.2019 இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியானதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் கொக்கட்டிச்சோலையை நோக்கிச் சென்று கொண்டிருந்த அவ்வூர் வாசியான எம். ஜெயக்குமார் (வயது 44) என்பவரே விபத்தில் பலியாகியுள்ளார்.
மண்முனை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இலகு வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இவ்விபத்து நேர்ந்துள்ளது.
உடற்கூறாய்வுக்காக் பொலிஸார் சடலத்தை மீட்டு ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இவ்விபத்துத் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment