3 Feb 2019

களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்.

SHARE
களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் சிரஞ்சீவி சுகாதாரப் பிரிவின் ஏற்பாட்டில் மாபெரும் டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பித்து களுவாஞ்சிகுடி பூராகவும் சனிக்கிழமை (02) நடைபெற்றது. 
நியூ ஒலிம்பிக் கழகத் தலைவர் ந.புருஷோத்மன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.எஸ்.கிருஸ்ணமார் களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையின் வைத்தியட்சகர் டாக்டர்.கு.சுகுணன் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் மே.வினோராஜ் அம்கோர் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் ப.முரளிதரன் செயற்திட்ட முகாமையாளர் யோ.சிவயோகராஜன் மற்றும் லிப்ட் நிறுவன பிரதிநிதிகள் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.திருச்செல்வம், களுவாஞ்சிகுடி பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.ரவிகரன் மற்றும் பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்கள் டெங்கு ஒழிப்பு அதிகாரிகள் வைத்தியசாலையின் ஊழியர்கள் கழக உறுப்பினர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டதுடன் களுவாஞ்சிகுடியில் உள்ள பொது இடங்கள் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றுக்கான கிணற்று மூடி வலைகள் வழங்கப்பட்டதுடன் பிரதேச சபையின் உதவியுடன் வீடுகளில் உள்ள பிளாஸ்ரிக், டயர்கள் மற்றும் நுளம்பு பெருகுவதற்கு ஏதுவாக உள்ள பொருட்கள் அகற்றப்பட்டதுடன் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் இணைந்து கிணறுகளில் மீன்குஞ்சுகள் இடப்பட்டு பொது இடங்கள் மற்றும் வாகனங்கள் வைத்தியசாலை ஆகியவற்றில் விழிப்புணர்வு ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டு பொது மக்களுக்கு ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கி வைக்கப்பட்டன. 

அத்துடன் இவ் டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தை மேற்கொண்ட களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் 52 வருடகால பழைமையைக் கொண்ட நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் இப் பிரதேசத்தில் விளையாட்டு கல்வி சுகாதாரம் ஆன்மீகம் ஆகிய பல்வேறு பட்ட துறைகளின் ஊடாக இப் பிரதேச மக்களுக்கு சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 















SHARE

Author: verified_user

0 Comments: