4 Feb 2019

மட்டக்களப்பு மாவட்டத்திலே இன நல்லுறவுக்குத்தான் முன்னுரிமை அளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது மட்டக்களப்பு உதவி மாவட்டச் செயலாளர் ஏ. நவேஸ்வரன்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்திலே இன நல்லுறவுக்குத்தான் முன்னுரிமை அளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது மட்டக்களப்பு உதவி மாவட்டச் செயலாளர் ஏ. நவேஸ்வரன்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே எந்த விடயத்திற்கு முன்னுரிமை அளித்து ஆராயப்பட வேண்டும் என்று கேட்கப்பட்ட பொழுது இன நல்லுறவுக்குத்தான் முன்னுரிமை அளிக்குமாறு சமூக அமைப்புக்களாலும் பொது நிறுவனங்களாலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக மட்டக்களப்பு உதவி மாவட்டச் செயலாளர் ஏ. நவேஸ்வரன் தெரிவித்தார்.

மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தியமைக்கான விருது வழங்கும் நிகழ்வு தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர். மனோகரன் தலைமையில் மட்டக்களப்பு கூட்டுறவுக் கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை 03.02.2019 இடம்பெற்றது.

வாகரைப் பிரதேசத்தில் கத்தோலிக்கர் அல்லாத வேறு மதப் பிரிவுகளைப் பின்பற்றுவோரின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக மயானக் காணி பெற்றுக் கொடுக்கப்படுவதற்கு முன்னின்றுழைத்த அதிகாரிகளையும் சமூகநல ஆர்வலர்களையும் பாராட்டி விருது வழங்கும் இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய  மட்டக்களப்பு உதவி மாவட்டச் செயலாளர் ஏ. நவேஸ்வரன்,

மட்டக்களப்பு மாவட்டத்திலே முக்கியப்பட்ட பிரச்சினைகளாக இன நல்லுறவு, நுண்கடன் தொல்லை, தற்கொலை என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றிலே இன நல்லுறவுக்கு  முதலாவது இடம் கொடுத்திருப்பது சிறந்த சகுனமதாக உள்ளது.

எல்லைக் கிராம சிங்கள மக்களும் அதேபோல போராளிக் குடும்பங்களும், கலந்து கொண்’ட ஒரு நிகழ்விலே மனக் கசப்புகள் பரிமாறப்பட்டன. தமிழ் மக்கள் ஏன் பிரிவினை கோருகிறிPர்கள் என்று சிங்கள மக்கள் கேட்ட கேள்விக்கு யாரும் இந்த நாட்டைக் பிரிக்கக் கோரவில்லை. தனித்து வாழ விரும்பவில்லை என்று நான் திட்டவட்டமாகப் பதிலளித்தேன். இது தங்களுக்கு ஒஉரு புரிந்துணர்வை ஏற்படுத்தியதாகவும் அச்சத்தை நீக்கியதாகவும் சிங்கள மக்கள் அங்கே கருத்துத் தெரிவித்தார்கள்.

எனவே எல்லா சமூகங்களிலும் இனவாதக் குழுக்கள் இருக்கின்றன. அவர்களது இனக்குரோத நடவடிக்கையால் சமூகங்களுக்கிடையில் கசப்பும், பகையுணர்வும், அழிவுகளும் ஏற்படுகின்றன.

எனவே இந்த இனவாதக் குழுக்களைச் சிதைக்கும் வகையில் சர்வமத குழுக்கள் இறுக்கமாகச் செயற்பட வேண்டும்.

இறந்த உடலை அடக்கம் செய்ய விடாது தடுத்து பிணத்தை மீண்டும் வீட்டுக்கே கொண்டு செல்லும் நிலைமை ஏற்பட்டால் இந்நாட்டின் எவ்வாறு நாம் வாழ முடியும், இதைப்போன்ற குரூர உணர்வும் அநாகரிகமும் வேறெங்கும் ஏற்படக் கூடாது.

மனிதாபிமானம் மரித்துப் போக நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
இறந்து விட்டால் அதற்குப் பெயர் பிணம் என்பதுதான் முதலில் அடையாளப்படுத்தப்படுமே தவிர அது தமிழர் சிங்களவர், முஸ்லிம் கிறிஸ்தவர் என்று எந்த வேறுபடுதலையும் காட்ட முடியாது.

இறந்த உடலுக்கு கண்ணியமும் மரியாதையும் கொடுக்கப்பட வேண்டும்.
இன வாதத்தால் விதைக்கப்பட்ட களைகளை இனியும் பசளையிட்டு நீருற்றி நாம் வளர்க்க முடியாது தற்போது இன ஐக்கித்தை வளர்ப்பதற்கான சந்தர்ப்பம் கனிந்து வந்திருக்கின்றது” என்றார்.

இந்நிஜகழ்வில் தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் சம்சுதீன் ஷாபி நயாஜ், உட்பட  மட்டக்களப்பு மாவட்ட சமாதானப் பேரவை உறுப்பினர்களும், பௌத்த. இந்து இஸ்லாமிய, கிறிஸ்தவ, கத்தோலிக்கரல்லாத, சமயங்களின் சமயத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.


SHARE

Author: verified_user

0 Comments: