1 Feb 2019

தமிழ் தேசியத்தை நேசித்த பாரத தேசத்தின் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜோர்ஜ் பெர்ணாண்டஸ்இன் மறைவுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம் - ஜனநாயகப் போராளிகள் கட்சி

SHARE
தமிழ் தேசியத்தை நேசித்த பாரத தேசத்தின் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜோர்ஜ் பெர்ணாண்டஸ்இன் மறைவுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம் - ஜனநாயகப் போராளிகள் கட்சி
தமிழ் தேசியத்தை நேசித்த பாரத தேசத்தின் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சரின் மறைவுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம் என  ஜனநாயகப் போராளிகள் கட்சி விடுத்துள்ள இரங்கற் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தேசத்தின் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் உடல் நலக் குறைவால் தனது 88 வயதில் கடந்த 29 ஆம் திகதி மரணடைந்துள்ளார்.

ஆந்த இரங்கற் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது….

இலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகஸ்த்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின் தாக்குதலில் 64 தமிழ்ப் பொது மக்கள் இறந்தனர். வியத்நாமில் மைலாய் நகரில் 1968 மார்ச்சு 16 இல் அமெரிக்கப் படைகள் தாக்குதலில் 300 -500 வியத்நாமியப் பொதுமக்கள் இறந்தனர். வியத்நாமில் அமெரிக்கப் படைகள் செய்ததையே வல்வெட்டித்துறையில் இந்தியப் படைகள் செய்ததாகக் குற்றம் சாட்டிய ஜோர்ஜ் பெர்ணாண்டஸ், வல்வெட்டித்துறையை இந்தியாவின் மைலாய் என அறிவித்தார்.

1983 க்குப்பின் இந்திய மனித உரிமை இயக்கங்கள் இலங்கைத் தமிழர் மீதான சிங்களவரின் தாக்குதல்களையும் தமது நிகழ்ச்சி நிரலில் ஆர்வத்துடன் சேர்த்துக்கொண்டன.

சென்னையில் ஊடகவியலார் தி.என்.கோபாலன் மிகுந்த ஆர்வம் காட்டினார். வி.ஆர்.கிருஷ்ண ஐயர், ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் போன்ற தமிழரல்லாத மனித உரிமை ஆர்வலர்களை, சம தரும ஈடுபாட்டாளரைச் சென்னைக்கு அழைத்து இலங்கைத் தமிழர் அழிப்புத் தொடர்பான மாநாடுகளை நடாத்தி வந்தார்.
அக்காலத்தில் ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் தமிழகத்தில் பலருக்கு இலங்கைத் தமிழர் ஆதரவாளராக அறிமுகமானார். அதற்குப்பின்னர் வாழ்நாள் முழுவதும் அவர் அந்தக் கொள்கையில் இருந்து பின்வாங்கவில்லை.

இலங்கைத் தமிழருக்காக அடக்கியோரை எதிர்த்து விரைந்து குரல் கொடுத்தன.
இலங்கைத் தமிழர் ஆதரவு நிலையில் தமிழகத்தில் பழ நெடுமாறன், ஜோர்ஜ் பெர்ணாண்டஸ{டன் நெருக்கமாகப் பணிபுரிந்தவர்.

விடுதலையை வேரறுக்க முடியாது. அதற்கான போராட்டங்கைளையும் நசுக்க முடியாது. அடக்கி ஆள்வோர் நடுவே எம்ஜியார் விடுதலைக்காகக் குரல் கொடுத்ததால் தனித்து ஒளிர்கிறார் என ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் எழுதினார்.  
விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம், ஜோர்ஜ் பெர்ணாண்டசுடன் தொடர்பு கெண்டார். இந்தியப் படைகள் விலகினால் விடுதலைப் புலிகளைப் பிரேமதாசா அழித்துவிடுவார் எனக் கூறினார். பாலசிங்கத்தை ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் சமுக்கமாகச் சந்தித்ததாகவும் செய்தி உண்டு. இந்தியாவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்தக் கேட்டுக்கொண்டார்.

இந்தியப் பிரதமரிடம் எடுத்துச் சொல்லும் நிலையில் தான் இல்லை எனப் பதிலளித்த ஜோர்ஜ் பெர்ணாண்டஸ், குடியரசுத் தலைவர் வேங்கடராமனுக்குக் கடிதம் எழுதினார். ஜோர்ஜ் பெர்ணாண்டஸிடம் மேலும் தகவல்களைக் கோரிப் பெற்ற வேங்கடராமன், பிரதமருக்கு அவை யாவற்றையும் அனுப்பினார்.  
1998 தொடக்கம் 2001 வரை ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர். முந்தைய அரசு இலங்கைக்குக் கடலோரப் பாதுகாப்புக் கப்பல்களைக் கொடுத்திருந்தது. ஒரு கப்பலை அனுப்பியபின் மற்றக் கப்பல் அனுப்பும் நிலையில் ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் இந்தியப் பாதுகாப்பு அமைச்சரானார். பழ நெடுமாறனின் வேண்டுகோளை ஏற்ற ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் இரண்டாவது கப்பலை இலங்கைக்கு அனுப்ப மறுத்தார்.

1998 தொடக்கம் 2001 வரை புலிகளின் போர் யுத்திகளில் மாற்றம் ஏற்ப்பட்டது அந்தநேரம் வன்னியில் அதிக ஆயுதம் தேவைப்பட்டது புலிகளின் 13 கப்பல்களும் வங்களா விரிகுடாவில் இந்திய கரையோரத்தில் மிக அருகாமையில் தரித்து நின்று வன்னிக்கான ஆயுதங்களை மற்றும் வளங்களை புலிகள் வன்னிக்கு கொண்டு வந்த நேரம் இந்தய கடற்படை  புலிகளின் கப்பல்களை எது அழிக்கமால் அச்சுறுத்தாமல் எமது பயணத்தை ஆதரித்து புலிகள் அடைந்த வெற்றிக்கு உறுதுணையாக நின்றார் புலிகளின் பேரியல் வரலாற்றில் ஆனையிறவு வெற்றிச்சமர் மற்றும் தீச்சுவாலை சமர் அனைத்து வெற்றி சமருக்கும் இந்திய கடற்படை புலிகளின் கப்பல்டையை ஆதரித்து இருந்தார்.

அதே காலகட்டத்தில் யாழ்ளை நோக்கி புலிகள் படை எடுத்து வந்து யாழ்குடாவை இறுக்கி நின்றநேரத்தில் அப்போதைய இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா முதல் சென்ற இடம் இந்தியா புலிகளை அழிக்க ஆயுதம் வேண்டும் என்றார் இந்திய பாதுகாப்பமைச்சர் பெருந்தகை ஜார்ஜ் பெர்ணாண்டஸ் கூறியது  ஆயுதம் தரமுடியாது வேண்டும் என்றால் எமது கப்பல்களை அனுப்பி இலங்கை படையை மீட்டு தருகிறோம் என்று கூறி சந்திரிக்காவை அனுப்பி வைத்தார். 
அமைச்சராகப் பணிபிரிந்த அதே காலத்தில் இலங்கைத் தமிழர் ஆதரவு மாநாட்டைத் தில்லியில் தன் வீட்டுப் பெருவெளியில் பழ நெடுமாறன், ஈழவேந்தன், வைகோ முதலானோர் பங்களிப்புடன் நடாத்தியமை அவரின் உணர்வுபூர்வமான ஈடுபாட்டின் வெளிப்பாடு. 

2000 ஆம் ஆண்டு யூன் 3 ஆம் நாள். சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம். 
வாஜ்பாயின் பதிலை ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் கூறினார். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் விரும்பும் தீர்வே இந்தியக் கொள்கை என்றார். ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமானவர் என்பதால் வாஜ்பாய் அவர் வழி கூறினார். அதே நாளில் இந்திய வெளியுறவு அமைச்சர் யஸ்வந்த் சிங் கொழும்பில் நின்றார்.

2000 யூலை 1, 2 நாள்கள்.   மாநாடு.

அந்த மாநாட்டிலும் ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் பேசினார். 1987-1988 இல் இந்திய அரசின் தவறான கொள்கையைப் பிரதமர் வாஜ்பாய் பின்பற்றமாட்டார் எனக் கூறிய அவர், தமிழரும் சிங்களவரும் இணைந்து கேட்டாலே இந்திய அரசு தலையிடும் எனக் கூறினார்.

அவர் காலமானார் என்ற செய்தி அறிந்து கலங்கினோம். இலங்கைத் தமிழரின் உணர்வுபூர்வமான நண்பர். அடித்தட்டு மக்களின் இதயத் துடிப்பு. விடுதலை இயக்கங்களுக்கு நீஷரூட்டி வளர்ப்பவர். அவரின் மறைவு இந்தியாவுக்கு மட்டுமன்று, மனித நேயர்களுக்குப் பேரிழப்பு. என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.



SHARE

Author: verified_user

0 Comments: