25 Feb 2019

ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட அச்சுறுதலின் விளைவாக உண்டான பொருளாதாரத் தளம்பலில் இருந்து நாடு இன்னும் விடுபடவில்லை அஞ்சல் சேவைகள் முஸ்லிம் சமய விவகார அமைச்சருமான எம்.எச். அப்துல் ஹலீம்,

SHARE
ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட அச்சுறுதலின் விளைவாக உண்டான பொருளாதாரத் தளம்பலில் இருந்து நாடு இன்னும்  விடுபடவில்லை
அஞ்சல் சேவைகள் முஸ்லிம் சமய விவகார அமைச்சருமான எம்.எச். அப்துல் ஹலீம்,
சமீப சில மாதங்களுக்கு முன்னர் ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட அச்சுறுதலின் விளைவாக உண்டான பொருளாதாரத் தளம்பலில் இருந்து நாடு இன்னும் நாடு விடுபடவில்லை என அஞ்சல் சேவைகள் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச். அப்துல் ஹலீம்,  தெரிவித்தார்.

ஏறாவூர் தபாலகத்தை புனருத்தாரணம் செய்வதற்கான வேண்டுகோளின் அடிப்படையில் அங்கு சனிக்கிழமை மாலை 23.02.2019 வருகை தந்த அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

தபாலதிபர் ஆதம்லெப்பை முஹம்மத் றியாழ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்;றிய அமைச்சர்,

மட்டக்களப்பு மாவட்டத்தின் அஞ்சல் சேவைகளை வினைத்திறனுள்ளதாக முன்னெடுக்கும் வகையில் அஞ்சல் திணைக்களத்தின் சுமார் 353 மி;ல்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு நகரில் 6 மாடிகளைக் கொண்ட புதிய அஞ்சல் கட்டிடத் தொகுதி நிருமாணிப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

தற்போது அரசாங்கம் பொருளாதமார ரீதியிலே பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் நிலையில் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இப்படியொரு இக்கட்டான நிலைமை ஏற்படுவதற்கு சமீபத்தில் நாட்டின் ஜனநாகத்திற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் அரசியல் குழப்ப நிலையே காரணமாகும்.

நாட்டில் ஸ்திரத்தன்மை அற்றுப்போனதான் காரணமாக நாட்டுக்குள் முதலீடுகளைச் செய்திருந்த பலர் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள்,

இதனால், தொடராகச் செய்து வந்த அபி;விருத்தி வேலைகளில் தடங்கல் ஏற்பட்டு பல பிரச்சினைகளுக்கு நாங்கள் முகங்கொடுக்க வேண்டியேற்பட்டு விட்டது.

எப்படியிருந்தும் இப்பொழுது இந்த தபாலக அபிவிருத்தி வேலைகள் ஆரம்பிப்பதற்குரிய நிதிகளைப் பெற்றுக் கொள்ளும் முயற்சிகளை நான் மேற்கொள்வேன்.

இந்த வரவு செலவுத் திட்டத்தின் பிறகு நிதியைப் பெற்றுத் தருவதாகக் கூறியிருக்கின்றார்கள்.

நான் இன்று பலாத்காரமாக கட்டாயப்டுத்தி அழைத்து கூட்டி வரப்பட்டேன்.

ஏறாவூர் தபாலகத்தைத் திருத்தி அமைப்பதற்காக சில திருத்த வேலைகளுக்கு 3 கோடி தேவைப்படுவதாக சொல்லப்பட்டிருக்கிறது. கடந்த காலத்திலும் நிதியமைச்சருடனும் இதுபற்றி நான் பேசியிருக்கின்றேன்.” என்றார்.

இந்நிகழ்வில் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சர் அலிஸாஹிர் மௌhலான, பிரதித் தபால் மா அதிபர் ராஜித ரணசிங்ஹ,  அஞ்சல் திணைக்கள கிழக்கு மாகாண பிரதித் தபால் மா அதிபதி ஜெயனந்தி திருச்செல்வம், மட்டக்களனப்பு அஞ்சற் பயிற்சிக் கல்லூரி அதிபர் பி;. நரேந்திரன், உட்பட இன்னும் பல அதிகாரிகளும் அஞ:சலக ஊழியர்களும் கலந்து கொண்டனர்.





SHARE

Author: verified_user

0 Comments: