22 Dec 2018

மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லயன்ஸ் கழகத்தினால் 10 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

SHARE
மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லயன்ஸ் கழகத்தினால் 10 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் கையளிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லயன்ஸ் கழகத்தினால் நிவாரணப் பொருட்கள் சனிக்கிழமை (22) வழங்கிவைக்கப்பட்டது.

கிழக்கு வலயம், மட்டக்களப்பு மாவட்ட 306 சீ 2 லயன்ஸ் கழகத்தின் உதவியில், சுமார் 10 இலட்சத்து 80ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள்  இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளிக்கப்பட்டது.

இதில் கரையோரப் பிரதேசமான விளாவட்டவான், மண்டபத்தடி  உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட 306 சீ 2 லயன்ஸ் கழக தலைவர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இப் பணியில்,  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், லயன் கழக ஆளுனர் - லயன் நிர்மல் ரணவக்க, வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், உதவி பிரதேச செயலாளர் திருமதி சுபா சதாகரன்,  செயலாளர்   லயன் கே.டி.கே.விஜேநாயக்கே,  லயன் லிஸ்மத் ஹமிட், லயன் சரத் பெரேரா, வலயம் 2 தலைவி லயன்   பாரதி கெனடி    மற்றும் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
  
வவுணதீவு பிரதேசம் என்பது, அதிகம்  வறுமையான மக்கள் பிரதேசங்களில் ஒன்றாகும், இப் பிரதேசம் வரட்சியாலும் வெள்ளத்தாலும்  பாதிக்கப்படும் பிரதேசமாகும், இவ்வாறான உதவிகளை சமூக நலன்சார்ந்த அமைப்புக்கள் வழங்குவது மிகவும் வரவேற்கத்தக்கது, இவ்வாறான உதவியை வழங்கிய லயன் கழகத்தினருக்கு பாதிக்கப்பட்ட மக்கள்சார்பில் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன் என    இந் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் உதயகுமார்   தெரிவித்தார். 




SHARE

Author: verified_user

0 Comments: