1 Nov 2018

மட்டு. முயற்சியாண்மை – 2018” கண்காட்சி

SHARE
மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் ‘மட்டு முயற்சியாண்மை – 2018’ எனும் தொனிப்பொருளிலான சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வர்த்தக கண்காட்சி நவம்பர் 03,04,05 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு கல்லடி, சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் நடைபெறவுள்ளது. 
காலை 10.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை நடைபெறவுள்ள மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களின் உற்பத்திகளை ஊக்குவிக்கும் முகமாகவும் அவர்களுக்கான ஒரு சிறந்த சந்தை வாய்ப்பாகவும் அமையவிருக்கின்ற இக் கண்காட்சியை இலவசமாகப் பார்வையிட முடியும் என மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்களைச் சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களின் கைவினைப் பொருட்கள், உணவு உற்பத்திகள், பனையோலை உற்பத்திகள், கைத்தறி உற்பத்திப்பொருட்கள், மட்பாண்ட உற்பத்திகள், சிற்பங்கள் மற்றும் பாதணிகள் என பல்வேறு உற்பத்திப்பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன. 

இதனடிப்படையில் எமது நோக்கம் மாவட்டரீதியில் காணப்படும் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களை ஊக்குவிப்பதும் அவர்களது உற்பத்திகளை விளம்பரப்படுத்தலும் அவற்றிக்கான சந்தைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்தலுமாகும். 

அந்தவகையில் எமது மாவட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களை ஊக்குவிப்பதனூடாக எமது மாவட்டத்தின் வறிய மக்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்துவதோடு ஓரு தன்னிறைவான சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதே எமது எதிர்காலத்திட்டமாகும். 

கண்காட்சி நடைபெறும் இரண்டு நாட்களும் இரவு வேளைகளில் இசை நிகழ்ச்சியும் எற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 

SHARE

Author: verified_user

0 Comments: