இலங்கையில் தற்போது காயப்படும் மழை கொண்ட காலநிலை செவ்வாய்க்கிழமை (09) வரை அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு நிலையப் பெறுப்பதிகாரி கே.சூரியகுமார் திங்கட்கிழமை (08) காலை தெரிவித்துள்ளார்.
இந்நிலமை குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்…
இலங்கையின் அனேகமான பிரதேசங்களில் திங்கட்கிழமை (07) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய காலநிலை காணப்படும். வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளிலும், காலி, மாத்தறை, மாவட்டங்களின் சில பகுதிகளிலும், காலை வேளைகளில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை காணப்படும்.
கிழக்கு, தெற்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா, மற்றும் மேற்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், 100 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சிக்கு அதிகமான மழைவீழ்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த இடியுடன்கூடிய மழை காலத்தில் காற்றும் பலமாக வீசும். எனவே பொதுமக்கள் இடி மின்னல் தாக்கத்லிருந்து ஏற்படும் சேதங்களிலிருந்து குறைத்துக் கொள்ளும் பொருட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
கடற்பிராந்தியங்களைப் பொறுத்தவரையில் கிழக்கு, வடக்கு, வடகிழக்கு, மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும். கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு காற்று 30 கிலோ மீற்றர் முதல் 40 கிலோ மீற்றர் வேகத்தில் மேற்கு அல்லது வடமேற்குத் திசையிலிருந்து காற்று வீசும். இது சில வேளைகளில் பொத்துவில் முதல் காலி, ஹம்பாந்தோட்டை, கொழும்பு வரையான கடற் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசுவதனால் இந்த கடற் பிராந்தியங்கள் கொந்தழிப்பாகக் காணப்படுவதுடன், ஏனைய கடற் பிராந்தியங்களும் சற்றுக் கொந்தழிப்பாகக் காணப்படும்.
அத்துடன் அராபியக் கடற் பிரதேசத்தில் காணப்பட்ட வலுவடைந்த தாளமுக்கம், கடந்த 6 மணித்தியாலத்தில் மணிக்கு 20 கிலோ மீற்றர் வேகத்தில் வடமேற்குத் திசையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இது தற்போது சூறாவெளியாக வலுவடைந்ததன் காரணத்தினால், இதற்கு ஓமான் நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட லுவான் எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இது ஓமான் நாட்டின் சலசா எனும் பிரதேசத்திலிருந்து கிழக்கு தென் கிழக்காக 1040 கிலோ மீற்றர் தூரத்திலும், யெபன் நாட்டின் சொகட்டா தீவிலிருந்து கிழக்கு, தென் கிழக்காக 920 கிலே மீற்றர் தூரத்திலும், லக்ஸ தீபத்திலிருந்து மேற்கு, வடமேற்காக 1260 கிலோ மீற்றர் தூரத்திலும், காணப்படுகின்றது.
இது மேலும் வலுவடைந்து மேற்கு, வடமேற்குத் திசையில் நகர்ந்து ஓமானின் தென்குப் பிரதேசத்திற்கும், யெபன் நாட்டின கரையோரப் பிரதேசத்திற்கும் இடையில் அடுத்துவரும் 5 நாட்களில் ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் அந்தமான் தீவுக்கு வடக்காக தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் தோன்றியுள்ள தாளமுக்க வலையமானது வலுவடைந்து கொண்டு வருகின்றது. இது அடுத்த 24 மணித்தியாலங்களில் தாளமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் பின்னர் 72 மணித்தியாலத்தில் வடகிழக்காக இந்திய ஒரிசா மானிலத்தின் கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு நிலையப் பெறுப்பதிகாரி கே.சூரியகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Comments:
Post a Comment