8 Oct 2018

அராபியக்கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட வலுவடைந்த தாழமுக்கமானது கடந்த 6 மணித்தியாலத்தில் மணிக்கு 20 கி.மீற்றர் வேகத்தில் வடமேற்குத் திசையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது

SHARE
அராபியக்கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட வலுவடைந்த தாழமுக்கமானது கடந்த 6 மணித்தியாலத்தில் மணிக்கு 20 கி.மீற்றர் வேகத்தில் வடமேற்குத் திசையில் நகர்ந்து கொண்டிருப்பதாக மட்டக்களப்பு நிலையப் பெறுப்பதிகாரி கே.சூரியகுமார் திங்கட்கிழமை (08) காலை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்….
அராபியக்கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட வலுவடைந்த தாழமுக்கமானது (Deep Depression கடந்த 6 மணித்தியாலத்தில் மணிக்கு 20 கி.மீற்றர் வேகத்தில் வடமேற்குத் திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது தற்போது சூறாவளியாக வலுவடைந்த்தன் காரணத்தினால் இதற்கு ஓமான் நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட லுவான் (Lubanஎனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது ஓமான் நாட்டின் சலாலா (Salalahபிரதேசத்திலிருந்து கிழக்கு தென்கிழக்காக 1040 கி.மீற்றர் தூரத்திலும், ஜெமன் (Yemenநாட்டின் சொகொற்றா (Socotra தீவிலிருந்து கிழக்கு தென்கிழக்காக 920 கி.மீற்றர் தூரத்திலும், லக்ஷதீபத்திலிருந்து (Lakshadweeமேற்கு வடமேற்காக 1260 கி.மீற்றர் தூரத்திலும் தற்போது காணப்படுகிறது.

இது மேலும் வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென் ஓமான் நாட்டிற்கும் ஜெமன் நாட்டின் கரையோரப் பிரதேசத்திற்கும் இடையில் அடுத்துவரும் 5 நாட்களில் கரையை ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை அந்தமான் தீவிற்கு வடக்காக தென்கிழக்கு வங்காளவிரிகுடாப் பகுதியில் தோன்றியுள்ள தாழமுக்க வலயமானது (Low Pressure Area வலுவடைந்து கொண்டு வருகின்றது. 

இது அடுத்த 25 மணி நேரத்தில் தாழமுக்கமாக (Depression வலுவடைந்து, அதனையடுத்து வரும் 72 மணித்தியாலத்தில் வடமேற்குத் திசையில் நகர்ந்து, இந்தியாவின் ஒரிசா மாநிலத்தின் கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: