தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்றயதினமும் களுவாஞ்சிகுடியில் முன்னெடுப்பு.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்களைச் சூழ பல்வேறு இடங்களில் தேசிய டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் வெள்ளிக்கிழமையும்(09.01.2026) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது அப்பகுதியிலுள்ள தனியார் கல்வி நிலையங்கள் பார்iவிடப்பட்டு, அவதானிக்கப்பட்டன.
சுகாதார விதிமுறைகளுக்கு அமைய தனியார் கல்வி நிலையங்களில் சகல உட்கட்டமைப்பு வசதிகளும் இரண்டு வாரங்களுக்குள் சீர் செய்யப்பட வேண்டும், டெங்கு பரவும் அபாயம் உள்ள சகல தனியார் கல்வி நிலையங்களும் உடனடியாக சுத்தப்படுத்த வேண்டும், என அறிவுறுத்தல் வழங்;கப்பட்டன.
இதன்போது டெங்கு அபாயம் பரவுக்கூடிய பல்வேறு இடங்கள் அடையாளம் காணப்பட்டு அழிக்கப்பட்டதுடன், அவ்வாறு அடையாளம் காணப்பட்ட இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் சுகாராத பரிசோதகர்களால் விடுக்கப்பட்டன.






0 Comments:
Post a Comment