23 Oct 2018

மட்டக்களப்பு பெரிய புல்லுமலையில் அமைக்கப்பட்டுவந்த போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலை நிறுவும் பணியினை முற்றாக கைவிடுவதற்கு தீரமானித்துள்ளதாக ரொமன்சியா லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

SHARE
மட்டக்களப்பு பெரிய புல்லுமலையில் அமைக்கப்பட்டுவந்த போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலை நிறுவும் பணியினை முற்றாக கைவிடுவதற்கு தீரமானித்துள்ளதாக ரொமன்சியா லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
குறித்த பிரதேச மக்களின் தொழிற்சாலை அமைப்பதற்கு பல வகையில் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர் அது போன்று தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர் இந்தநிலையில் எமது நிறுவனம் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் தொழிற்சாலை அமைப்பதில்லலை என தீர்மானித்துள்ளது என இந்நிறுவனத்தின் நிருவாகிகளின் ஒருவரான முகம்மட் அப்துல் ஜெஷீம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பெரியபுல்லுமலையில் அமைக்கப்பட்ட போத்தில் அடைக்கப்பட்ட குடிநீர் தொழிற்சாலையினை நிறுத்வது தொடர்பாக அறிவிக்கும் கூட்டம் செங்கலடி செல்லம் பிறிமியர் அரங்கில் திங்கட்கிழமை (22) மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ரொமன்சியா லங்கா நிறுவனத்தின் உரிமையாளரான முகம்மட் மும்தாஜ் மௌலவியின் சகோதரரும் நிறுவனத்தின் நிருவாகிகளின் ஒருவரான முகம்மட் அப்துல் ஜெஷீம், முகம்மட் அமீர், தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன், அமைப்பின் உறுப்பினர்கள் பிரதேசத்தைச் சேர்ந்த மத தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  

அவர் கருத்து தெரிவிக்கையில் … குறித்த தொழிற்சாலைக்கும் காத்தான்குடி நகரசபைத் தவிசாளருக்கோ அல்லது இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவிற்கோ சம்மந்தம் கிடையாது. இந்த தொழிற்சாலையினை அரசியல் மயப்படுத்த வேண்டாம். இதைவைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள்.

தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் எப்போதும் ஒற்றுமையாக வாழ வேண்டும். இந்த தொழிற்சாலையினை வைத்து இனங்களிடையே முறுகல் நிலையினை ஏற்படுத்தும் அரசியல் கைங்கரியங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாங்கள் இந்த பிரச்சினைகளை சமாதானமாக பேசி தீர்ப்பதற்காகவே வந்துள்ளோம்.
எமது நிறுவனம் தமிழ் உணர்வாளர் அமைப்பின் ஊடாக அந்த பகுதி மக்களுக்கான அபிவிருத்திகளை வழங்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்” என்றார்.

இங்கு தமிழ் உணர்வாளர்கள் கருத்து தெரிவிக்கையில் … குறித்த தொழிற்சாலையினை நிறுத்திக் கொள்கிறோம் என வெறுமனே கூறிக்கொள்ளாமல் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் குறித்த விடயம் தொடர்பாக எதிர்காலத்தில் எந்த வித சட்ட விவாதங்களுக்கும் செல்லாத வகையில் கடிதம் எழுதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கும் அனுப்ப வேண்டும் என்றனர். 




SHARE

Author: verified_user

0 Comments: