12 Sept 2018

மட்.பட் .மண்டூர் 13 விக்னேஸ்வராமகாவித்தியாலயம் சித்திரப்போட்டியில் மீண்டும் சாதனை.

SHARE
சொயிலியஸ் மென்டிஸ் தின அகில இலங்கை சிறுவர் சித்திரப் போட்டியில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் அமைந்துள்ள மட்.பட்.மண்டூர் 13 விக்னேஸ்வரா மகாவித்தியாலய மாணவர்கள் எட்டுப்பேர் தேசிய மட்டத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களுக்கான பரிசளிப்புவிழா கடந்த 2018.09.01 அன்று கண்டியில் உள்ள கிராகம ஆசிரியர் கலாசாலையில் நடைபெற்றது. 
இதில் சிரேஸ்ட உயர் நிலைப் பிரிவில் க.ரூபிகா, அ.குகாசினி, கு.பவித்திரா, இ.தேவப்பிரியா ஆகிய நான்கு மாணவிகளும், சிரேஸ்ட பிரிவில் செ.டிலக்ஷனா,  கி.டனுசியா, கு.மோகனன் ஆகிய மூன்றுமாணவர்களும், ஆரம்பப்பிரிவில் பி.ஹிஸ்ரிகாஎன்றமாணவியும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதன்போது இவர்களுக்கான பரிசில்களையும், சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டனர். இம்மாணவர்களையும், இவர்களை பயிற்றுவித்து வழிப்படுத்திய சித்திரப்பாட ஆசிரியர் பு.சிறிகாந் அவர்களையும், பாடசாலை அதிபரையும் பாடசாலைச் சமூகம் பாராட்டுவதோடு கல்வி வலய அழகியல்துறைக்குப் பொறுப்பான உதவிக்கல்விப்பணிப்பாளர் க.சுந்தரலிங்கம் அவர்களும் பாராட்டுகின்றார்.




SHARE

Author: verified_user

0 Comments: