12 Aug 2018

விருட்சம் மாதிரிக் கிராம திறப்பு விழா

SHARE
மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவின் சவுக்கடி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள விருட்சம் மாதிரிக் கிராம திறப்பு விழா திங்கட்கிழமை 13.08.2018 காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.
வீடமைப்பு நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிறேமதாஸாவினால் திறந்து வைக்கப்படவுள்ள இந்தக் கிராமத்தில் 29 புதிய வீடுகள், நீர்மற்றும் மின்சார வசதி,   உள்ளகப் பாதை வசதி, பிரவேசப் பாதை ஆகியனவும் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

மேலும், விருட்சம் மாதிரிக் கிராமத்தில் 29 குடும்பங்களுக்கு வீடுகளுக்கான உரிமைப் பத்திரம், அபிவிருத்தி செய்யப்பட்ட 29 காணித் துண்டுகள் வழங்கல், அறுதி உறுதிப் பத்திரங்கள் வழங்கல், பயனாளிகள் 192 பேருக்கும் வீடமைப்பு உதவிக் காசோலை வழங்கல், பயனாளிகள் 75 பேருக்;கு “சொந்துருபியச” எனும் திட்டத்தின் கீழ் தலா 2 இலட்ச ரூபாய் வீடமைப்புக் கடன் வழங்கல், பயனாளிகள் 200 பேருக்;கு “விசிரி” திட்டத்தின் கீழ்  தலா ஒரு இலட்ச ரூபாய் இலகு கடன்களுக்கான காசோலை வழங்கல் உட்பட இன்னும் பல உதவிச் சேவைகளுடன் இலவச கண் கண்ணாடிகள் வழங்கல் என்பனவும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: