ஏ.எல்.எம்.ஷினாஸ்
மருதமுனை ஜம்மியதுல் உலமா சபை எதிர்வரும்  ஹஜ் பெருநாள் தினத்தை முன்னிட்டு மருதமுனை கடற்கரை திறந்தவெளிக்கு வருகைதரும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை ஒழுங்குபடுத்தி செய்துதர வேண்டும் எனக் கோரி   மாநகர சபையின் ஆணையாளருக்கு மகஜர் ஒன்றை கையளித்துள்ளது. 
இந்த மகஜரை  மருதமுனை  ஜம்இய்யதுல் உலமா சபையின்   பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் எப்.எம்.ஏ.அன்ஸார் மௌலானா (நழீமி)  செயலாளர் அஷ்ஷெய்க்.எஸ்.எம்.றியாஸ் (நழீமி) ஆகியோர் மாநகர சபையின் ஆணையாளர் அலுவலகத்திற்கு சென்று (20) ஆணையாளர் எம்.சி.அன்சாரிடம் கையளித்தனர் 
மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சென்ற நோன்புப் பெருநாள் தினங்களில் மருதமுனை கடற்கரைப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை கட்டுப்படுத்த கல்முனை மாநகரசபையால் மேற்கொண்ட முயற்சியை மருதமுனை உலமா சபை வரவேற்கும் அதே வேளை அப்பணியை சிறப்பாகவும் வினைத்திறமையாகவும் மேற்கொள்ள முடியாமல் போனமைக்கு பல இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டதை இட்டு மிகவும் கவலை அடைகின்றது.
எனவே, சென்ற பெருநாளில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு எதிர்வரும் ஹஜ் பெருநாள் காலங்களில் (22 – 26) திகதி வரையான காலப்பகுதியில் போக்குவரத்து நடவடிக்கையை கட்டுப்படுத்த முடியுமான ஏற்பாடுகளைச் செய்வதோடு பின்வரும் வசதிகளை பொதுமக்களுக்கு செய்து தருமாறு வேண்டுகிறோம். போதுமான குடிநீர் வசதி, மின்சார வசதி( வெளிச்சம்), ஆண் / பெண் கலப்பின்றி பிரத்தியேகமாக உட்காரும் இருக்கை வசதிகள், கழிவகற்றல் முகாமைத்துவ வசதி, பொலிஸ் ரோந்துச் சேவை, இஸ்லாமியக் கலாசாரத்தை பாதிக்கும் அனாச்சார நிகழ்சிகளுக்கு பொலிஸ் அனுமதி வழங்குவதை தடைசெய்தல் 
போன்ற மேற்படி விடயங்களை கல்முனை மாநகர சபை கவனத்தில் எடுத்து  செயற்படுவதோடு எமது கடற்கரை ஓர் வளம் என்ற வகையில் அதனை சுத்தமாக  வைத்திருக்கக் கூடிய ஏற்பாடுகளை தொடர்ந்து மாநகர சபை  மேற்கொள்ளுமாறு மருதமுனை ஜம்இய்யதுல் உலமா அன்பாக வேண்டுகோள் விடுக்கின்றது என தெரிவிக்கப்பட்டள்ளது.




.jpeg) 
 
 
.jpeg) 
0 Comments:
Post a Comment