21 Aug 2018

கல்லடி உப்போடை பேச்சியம்மன் ஆலயத்தில் கௌரவிப்புக்கள் நடைபெற்றது.

SHARE

மட்டக்களப்பு கல்லடி உப்போடை சித்திவிநாயகர் பேச்சியம்மன் ஆலயத்தின் ஏற்பாட்டில் "வாழும்போதே வாழ்த்துவோம்" நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(19.8.2018) இரவு நடைபெற்றது.

பேச்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கினை முன்னிட்டு இந்த கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது.
கல்லடி உப்போடை சித்திவிநாயகர் பேச்சியம்மன் ஆலயத்தின் தலைவர் கே.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம்-உதயகுமார்,அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன்,களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெட்னம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதியாக கல்லடி இராமகிருஸ்ணமிசன் தலைவர்,சிவயோகச்செல்வன் சாம்பசிவ சிவாச்சாரியார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது கல்விப்பணியில் சிறந்த சேவையினையாற்றி ஓய்வுபெற்ற கல்லடி உப்போடை விவேகானந்தா மகளீர் கல்லூரி முன்னாள் முதல்வர் திருமதி.திலகவதி-ஹரிதாஸ்,பல ஆண்டுகள் இந்துப்பணியாற்றிவரும் சைவப்புரவலர் மு.சேமகரன்,50ஆண்டுகளாக பேச்சியம்மன் ஆலயத்தில் இறைபணியாற்றிவரும் .தேவதாஸ் ஆகியோர் இதன்போது வாழும்  வாழ்த்துவோம் என்னும் அடிப்படையில் கௌரவிக்கப்பட்டனர்.







SHARE

Author: verified_user

0 Comments: