மட்டக்களப்பு - ஏறாவூர் நகரத்திலிருந்து காணமல்போன மூதாட்டி இரு தினங்கள் கழிந்த நிலையில் பொலொன்னறுவை நகரத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏறாவூர் மீராகேணி வீதியைச் சேர்ந்த ஜெமீலா உம்மா எனும் சுவாதீனமற்ற மூதாட்டி ஒருவர் அவரது பிள்ளைகளுடன் வீட்டிலிருந்த சமயம் கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போயிருந்தார்.
தகவல் பரிமாற்றத்தின் மூலம் தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்ட உறவினர்கள் அவர் பஸ் ஒன்றில் ஏறி சென்றதை அறிந்து பொலொன்னறுவை – கதுறுவெல பஸ் நிலையத்திற்குச் சென்று அங்குள்ள பொலிஸ் சாவடியில் விசாரித்துள்ளனர்.
அப்பொழுது காணாமல்போன பெண் பஸ் நிலையத்தில் நடுமாடுவதாக பொலிஸார் தெரிவித்ததைத் தொடர்ந்து அங்கு தேடுதலில் ஈடுபட்ட உறவினர்கள் அவர் அநாதரவாக இருந்த நிலையில் அவரை மீட்டெடுத்து ஏறாவூருக்கு கொண்டு வந்து சேர்ப்பித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment