27 Aug 2018

பொலிஸ் நிலையத்திலும்; கிராம சேவகர் அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யச் சென்றபோது கைகலப்பில் ஈடுபட்ட 3 பெண்கள், 5 ஆண்கள் உட்பட 8 பேர் கைது

SHARE
மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் நிலையத்திலும்; இலுப்படிச்சேனை கிராம சேவகர் அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யச் சென்றபோது இவ்விரு இடங்களிலும் கைகலப்பில் ஈடுபட்ட 3 பெண்கள், 5 ஆண்கள் உட்பட 8 பேர் கைது  செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை பிற்பகல் 25.08.2018 இடம்பெற்ற இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, குடும்பத் தகராறு ஒன்றின் காரணமாக குடும்பங்களைச் சேர்ந்த உறவினர்கள் முதலில் இலுப்படிச்சேனை கிராம சேயாளரிடம் சென்றுள்ளனர்.

முறைப்பாடு செய்யச் சென்றவர்கள் முன்னதாக கிராம சேவகரின் முன்னிலையில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு கைகலப்பில் இறங்கியுள்ளனர்.

குதர்க்கம் செய்து கைகலப்பில் ஈடுபட்டவர்களை  சமரசஞ் செய்து கொள்ள முடியாமற்போன கிராம சேவயாளர் சம்பந்தப்பட்ட நபர்களை பொலிஸ் நிலையம் செல்லுமாறு ஆலோசனை கூறியுள்ளார்.

அதன்படி கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற இரு சாராரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்து கொண்டிருக்கும்போது மீண்டும் வாய்த்தர்க்கம் செய்து கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 3 பெண்களும் 5 ஆண்களுமாக மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரியும் கணவன் அனுப்பும் பணத்தில் சுகமனுபவிக்கும் பெண்ணொருவர் முறைகேடான தொடர்புகளைப் பேணி வருவதாகத் தெரிவித்தே இக்குடும்பத்தினர் வாய்த்தர்க்கத்திலும் கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம்பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: