உலக அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கிழக்கு மாகாணமும் தயாராக வேண்டும் என கிழக்கு மாகாண பிரதம செலாளர் டி.எம்.எஸ். அபயகுணவர்தன தெரிவித்தார்.
காலநிலை மாற்றத்தினால் ஏற்படக் கூடிய பாதகமான பின் விளைவுகளை ஆராய்ந்து மாகாணத்திற்குத் தேவையான தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்தக் கூடிய (Adaptation
Plan) ஒத்திசைவுத் திட்டத்தை முன்மொழியும் கருத்தரங்கு Preparation of Sri Lanka’s
Third National Communication on Climate Change and to develop Provincial
Adaptation Plans – Eastern province Workshop ஜனதாக்ஸன் நிறுவனத்தின்; ஏற்பாட்டில் கிழக்கு மாகாண பிரதம செயலாளரின் மாநாட்டு மண்டபத்தில் சனிக்கிழமை 21.07.2018 இடம்பெற்றது.
கிழக்கு மாகாண திணைக்களங்களின் மாகாணப் பணிப்பாளர்கள், உள்ளுராட்சி ஆணையாளர்கள், பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், உட்பட சுமார் 100 அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாண பிரதம செலாளர் டி.எம்.எஸ். அபயகுணவர்தன. மேலும் கூறியதாவது,
பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்கள், துரித பொருளாதார வளர்ச்சிக்கான முன்னெடுப்புக்கள், மற்றும் இன்னபிற மனித நடவடிக்கைகளினால் உண்டான செயற்கை மாற்றங்களினால்; இப்பொழுது இயற்கையின் காலநிலைச் சமநிலையில் தளர்வு ஏற்பட்டு அது பல பாதிப்புக்களைத் தந்து கொண்டிருக்கின்றது.
இது உலகளாவிய சவாலாக உருவெடுத்திருக்கின்ற தற்போதைய சூழ்நிலையில் அதனைத் தணிப்பதற்கும் அந்த சவாலை இயற்கையோடு ஒத்திசைவானதாகவும் நீடித்து நிலைக்கக் கூடியதாக மாற்றுவதற்கும் பிரதேச, மாவட்;ட, மாகாண மற்றும் தேசிய மட்ட ஒத்திசைவுத் திட்டங்களை முன்மொழியும் செயலமர்வுகள் இடம்பெறுகின்றன.
இதனை ஒரு சிறந்த வாய்ப்பாகப் பயன்படுத்தி நாமும் கிழக்கு மாகாணத்திற்குத் தோதான காலநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுக்கக் கூடிய திட்டங்களை முன்வைத்து அவற்றை அமுல்படுத்த வேண்டும்.
காலநிலை மாற்றத்தைப் பற்றிக் கரிசனை கொள்வது மற்றெல்லாத் திட்டங்களையும் விட கரிசனைக்குரிய முன்னுரிமைப்படுத்தக் கூடிய விடயமாக மாறியிருக்கின்றது.
பொருளாதார அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு, உணவுற்பத்தி, குடிநீர், நீர்ப்பாசனம், சுகாதாரம் சமூக ஸ்திரத்தன்மை என்பவனற்றில் காலநிலையின் தாக்கம் நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிக பாதிப்புக்களைச் செயலுத்துவதாகக் கண்டறியப்பட்டு உலகம் அதன்பால் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.
சமீப காங்களாக இலங்கையிலும் எதிர்பாராத காலநிலை மாற்றங்களால் இடர்கள் அதிகரித்து ஈடுசெய்ய முடியாத இழப்புக்களை ஏற்படுத்தி வருவதை நாமறிவோம்.
இந்நிலையில் கிழக்கு மாகாணமும் தேசிய மற்றும் சர்வதேச கரிசனையுடன் ஒட்டியதாக தனது திட்டங்களையும் அமுலாக்கங்களையும் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது” என்றார்.
இந்த நிகழ்வில் இலங்கை காலநிலை மாற்றம் சம்பந்தமான செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுனிமல் ஜயதுங்க, Dr Sunimal Jayathunga,
Director, Climate Change Secretariat தேசிய காலநிலை மாற்ற ஒத்திசைவு நிபுணர் குழுவைச் சேர்ந்த பேராசிரியர் புத்தி மாரம்பே Professor Buddhi Marambe ,
National experts committee on Climate Change Adaptation> ஜனதாக்ஸன் நிறுவனத்தின் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி ரங்கபல்லாவல, கிழக்கு மாகாண திட்டமிடல் பிரதிப் பிரதம செயலாளர் என். தமிழ்ச் செல்வன் உட்பட இன்னும் பல துறைசார்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் வரையறை அதற்கிணங்க தேசிய ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்ட பங்களிப்புக்கள் தொடர்பாக முன்னேற்ற அறிக்கை சமர்ப்பிக்கும் 3வது தேசிய ரீதியிலான தொடர்பாடல் மாநாடாக இது அமைந்திருந்தது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி ஸ்தாபனத்தின் நிதி அனுசரணையுடன் காலநிலை மாற்ற செயலகத்தின் வழிகாட்டலின் கீழ், இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனம், (Srilanka
Press Institute) ஜனதாக்ஸன்,> (SLYCAN
TRUST)
சிலைகன் ட்ரஸ்ற், (IDEA Kandy)ஐடியா கண்டி, (ஐனுநுயு முயனெல) ஆகிய நிறுவனங்கள் இத்திட்டத்தை இலங்கையில் அமுலாக்கம் செய்கின்றன.
மாகாண மட்டத்தில் கால நிலை தொடர்பான மாற்றங்களை அமுலாக்கம் செய்யும் அரச அதிகாரிகளுக்கிடையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நிகழ்ச்சித் திட்டத்தின் முதற்கட்டப் பணியாகும்.
0 Comments:
Post a Comment