23 Jul 2018

உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஓவியப் போட்டியில் மட்.பட் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகாவித்தியாலய மாணவன் முதலாமிடம்.

SHARE
உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு வலயமட்டத்தில் நடாத்தப்பட்ட ஓவியப் போட்டியில் மட்.பட் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகாவித்தியாலய மாணவன் முதலாமிடத்தைப் பெற்று சாதனைபடைத்துள்ளார். உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட எயிட்ஸ் நோய் தடுப்புப் பிரிவினர் நடாத்திய ஓவியப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்புவிழா சனிக்கிழமை (21) மட்டக்களப்பு மகாஜன கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 
இதில் பட்டிருப்பு கல்வி வலயத்தின் சார்பில் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டமாணவன் ரா.விதுஷன், பயிற்றுவித்த சித்திரப்பாட ஆசிரியர் பு.சிறிகாந் மற்றும் பாடசாலை அதிபர் அனைவரையும் பாடசாலைச்சமூகம் பாராட்டுகின்றது. 

அத்தோடு பட்டிருப்பு கல்விவலயத்தின் சார்பில் வெற்றியீட்டிய அனைத்து மாணவ மாணவிகளையும், வெற்றிக்கு வழிகாட்டிய ஆசிரியர்கள், அதிபர்களையும், பாராட்டுவதாக பட்டிருப்பு கல்விவலய அழகியல்துறைக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளர் க.சுந்தரலிங்கம் தெரிவித்தார். 


SHARE

Author: verified_user

0 Comments: