23 Jul 2018

காட்டுயானைகளின் அட்டகாசம் 4 விடுகள் சேதம்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட நவகிரி நகர் 38 ஆம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு புகுந்த காட்டு யானைகளினால் அக்கிராமத்தில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
இரவு வேளையில் புகுந்த காட்டு யானைகள் அக்கிராமத்தில் 4 வீடுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன் பயன் தரும் தென்னை, வாழை போன்ற பயிரினங்களையும் துவம்சம் செய்துள்ளன.

இதில் மக்கள் எவருக்கும் எந்தவித பாதிப்புக்களும் இன்றி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

இந்நிலமையினை அறிந்த போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி உள்ளிட்ட குழுவினர் சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இந்நிலமை தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாவவும் இதன்போது போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி தெரிவித்தார்.








SHARE

Author: verified_user

0 Comments: