23 Jul 2018

வீடு தீக்கிரையாக்கப்பட்ட குடும்பத்திற்கு பிரதேச சபை தவிசானர் உதவி.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட பழுகாமம் கிராமத்தில் அண்மையில் மின்சார ஒழுக்கு காணமாக தீப்பற்றி முற்றாக எரிந்த வீட்டிற்கு போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் ஞாயிற்றுக் கிழமை (22) நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது வீட்டில் இருந்த அத்தனை உடமைகளும் மின்சார ஒழுக்கினால் முற்றாக தீப் பற்றி எரிந்து நாசமாகியுள்ளதுடன் வீடும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.  இதில் இருந்தவர்கள் எதுவித ஆபத்துக்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

அக்குடும்பத்தின் நிலமையினைக் கருத்தில் கொண்டு மேற்படி பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்பகள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட குடும்பபத்திற்கு ஒரு தொகை நிதி உதவியை வழங்கி வைத்ததுடன் மேற் கொண்டு ஏனைய இதன உதவிகளையு மேற்கொள்ள மதிப்பீடுகளை மேற்கொள்வதாக போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி தெரிவித்தார்.








SHARE

Author: verified_user

0 Comments: