16 May 2018

வெற்றி தோல்விகள் நேரான எண்ணங்களாக அமைய வேண்டும் வலயக் கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி.

SHARE
தமிழ் மொழிதினப் போட்டிகளில் மாணவர்கள் பெற்றுக் கொள்கின்ற வலய, மாவட்ட, மாகாண, தேசியமட்டத்திலான வெற்றிகள் பல்கலைக்கழக அனுமதியில் பாரியபங்களிப்பு செலுத்துவது மாத்திரமல்லாது போட்களில் மாணவர்கள் ஏற்படுத்திக் கொள்கின்ற வெற்றி தோல்விகள் நேரான எண்ணங்களை நெறிப்படுத்துவதாக அமைகின்றபோது எதிர் காலசவால்களை எதிர் கொண்டுதீர்க்க தரிசனமான முடிவினைபெறும் விளைதிறன் கொண்ட சமூகத்தினை கட்டியெழுப்பக் கூடியதாக அமையும்.
கல்முனை கல்வி மாவட்டத்திலுள்ள கல்முனை, சம்மாந்துறை திருக்கோயில், அக்கரைப்பற்று ஆகிய நான்கு கல்விவலயங்களையும் உள்ளடக்கிய வகையில் திங்கட் கிழமை (14) அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிஷன் தேசியபாடசாலையில் நடை பெற்ற தமிழ் மொழிதினப் போட்டியினை தலைமைப் பொறுப்பேற்று ஆரம்பித்து உரையாற்றும் போதே திருக்கோயில் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதிநகுலேஸ்வரிபுள்ளநாயகம் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மொழிதினப் போட்டியின் ஆரம்ப நிகழ்வுகளாக தமிழ் மொழிவாழ்த்துப்பா இசைக்கப்பட்டதுடன் முத்தமிழ் வித்தகர் சுவாமிவி புலானந்தர் அடிகளாரின் திருவுருவம் திரைநீக்கம் செய்யப்பட்டதுடன் அன்னாரின் உருவச் சிலைக்குமலர் மாலையும் அணிவிக்கப்பட்டன. இதன் போது கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, திருக்கோயில் ஆகிய கல்விவலயங்களைச் சேர்ந்தபிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், தமிழ்ப்பாட உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…..  நேரான சிந்தனைகள் மாணவர் திறமையினை உயர்த்துவதாகவும் மறையான சிந்தனைத் திறன்கள் மாணவர்களின் திறமைகளை மழுங்கடிப்பதாகவும் அமைகின்றது.மாணவச் செல்வங்கள் நேரான சிந்தனையில் பயணிக்க வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது. மாணவர்களது அற்பணிப்பு பயிற்சி அதற்கான நுட்பங்கள் போண்றவற்றினை திறன்பட வெளிக் காட்டி போட்டிகளில் வெற்றிபெற வேண்டும்.

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அடிகளார் வாழ்ந்த அம்பாறை மண்ணில் தமிழ் மொழிதினப் போட்டிகள் நடைபெறுவதனை இட்டு வலயக் கல்விப் பணிப்பாளர் என்ற வகையில் மட்டற்ற மகிழ்சியடைகின்றேன். அன்பான ஆசிரியர்களே மாணவச் செல்வங்களின் வெற்றிக்கு வழிகாட்டியாகத் திகழ்கின்ற மாணவரடகளது அற்பணிப்பான சேவையினை பாராட்டுகின்றேன். இங்கு வந்திருக்கின்ற ஒவ்வொரு மாணவர்களினதும் திறன்களின் வெளிப்பாட்டில் ஏற்படுத்தப்படவுள்ள வெற்றியானது. இத்துடன் நிறைவு பெறாதவகையில் மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக உங்களது செயற்பாடுகள் அமைந்திருக்க வேண்டும்.

பெருமதிப்புமிக்க நடுவர்களே நீங்கள் இன்று நேற்றல்ல பல வருடகாலமாக போட்டிநிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றீர்கள் நீண்டகால அனுபவம் கொண்டவர்கள். எமது கிழக்கு மாகாணம் தேசிய போட்டிகளில் பெருமைசேர்க்க உங்களது அற்பணிப்பான நடுவனம் பாரிய செல்வாக்கு செலுத்த வேண்டும். திறமைகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் போட்டியாளர்கள் தெரிவுசெய்படுவார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன். அப்போதுதான் எமது மாணவர்கள் இலகுவாக தேசியமட்டத்தில் நடைபெவுள்ள போட்டிகளில் வெற்றிவாகை சூடுவார்கள் பலசிரமங்களுக்கு மத்தியில் வெளிமாவட்டத்திலிருந்து எமது அழைப்பினை ஏற்றுவருகைதந்த உங்களை கௌரவத்துடன் வரவேற்கின்றேன். இவ்வேளையில் போட்டியில் பங்கேற்க வருகைதந்திருக்கின்ற அனைத்து மாணவர்களும் மாகாண, தேசியமட்டத்தில் நடைபெறவுள்ள போட்டிகளிலும் பங்கேற்று சாதனைபடைக்க வேண்டும் என வாழ்த்துவதாக குறிப்பிட்டார்.


SHARE

Author: verified_user

0 Comments: