தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் ஞாயிற்றுக் கிழமை (20) மாலை மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்து வைத்தியசாலையின் நிலைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
இவ்வைத்தியசாலையில் காணப்படும் மனிதவளப் பற்றாக்குறை, பௌதீக வளப்பற்றாக்குறை, போன்ற பல குறைபாடுகள் தொடர்பில் அமைச்சரிடம் வைத்தியசாலை அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் எடுத்துரைத்தார்.
இதன்போது வைத்தியாசலை வளாகத்தை சுற்றிப் பார்ந்த அமைச்சர் வைத்திய அத்தியட்சகர் வைத்தியசாலை உத்தியோகஸ்த்தர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
மேலும் வைத்தியசாலையின் தேவைகளைக் கேட்டறிந்த அவர் அங்கு காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக சுகாதார அமைச்சர், பிரதமர், தேவைஏற்படின் ஜனாதிபதியின் கனத்திற்கும் கொண்டு செல்வேன் என இதன்போது உறுதியளித்ததாக வைத்தியசாலை அத்தியட்சகர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment