6 May 2018

காட்டுயானை தாக்கி விவசாயி பலி

SHARE
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கார்மலை எனுமிடத்தில் சனிக்கிழமை 05.05.2018 மாலை 5.45 மணியளவில் விவசாயி ஒருவரை காட்டு யானை வழிமறித்துத் தாக்கியதில் அவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
செங்கலடி – குமாரவேலியார்கிராமம் சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த நாகண்டாப்போடி சங்கரப்பிள்ளை (வயது 64) என்பவரே கொல்லப்பட்டவராகும்.
இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, மாடுகள் பராமரிப்பு மற்றும் விவசாயத்தை மேற்கொள்ளும் இவர் தனது வாடிக்குச் சென்றபோது திடீரென வழிமறித்த காட்டு யானைகளில் ஒன்று  விவசாயியை விரட்டிச் சென்று தாக்கியுள்ளது.

இதன் காரணமாக அவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.
இது ஆட்களைத் தாக்கி வரும் தனியன் யானை என்று பிரதேச மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

சமீப சில நாட்களுக்கு முன்னரும் இதே பகுதியில் வைத்து விவசாயி ஒருவர் காட்டுயானை தாக்கியதில் கொல்லப்பட்டதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

கரடினாறு பொலிஸார் ஆகியோர் ஸ்தலத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வு பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதோடு மேலதிக  விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
  

SHARE

Author: verified_user

0 Comments: